»   »  மயங்கிய சினேகா

மயங்கிய சினேகா

Posted By:
Subscribe to Oneindia Tamil


தெலுங்குப் படப்பிடிப்பில் இரவு பகலாக நடித்து வந்த சினேகா, மயக்கமடைந்து விழுந்ததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.


தமிழைப் போலவே தெலுங்கிலும் நிறையப் படங்களில் நடித்து வருகிறார் சினேகா. தற்போது தெலுங்கில் 3 படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

3 படங்களின் ஷூட்டிங்கிலும் அடுத்தடுத்து கலந்து கொண்டு நடித்து வருகிறாராம் சினேகா. நீ சுகமே நேன்கொடு கொண்டானு என்ற படத்தின் படப்பிடிப்பு ஓங்கோலில் நடந்து வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங்கை வேகமாக முடிக்க வேண்டும் என்பதற்காக இரவு நேரம் பாராமல் படு விறுவிறுப்பாக காட்சிகளை சுட்டு வந்தார் இயக்குநர் கிரிபாபு.

இந்த நிலையில், அதிகாலை நேரத்தில் நடந்த படப்பிடிப்பின்போது திடீரென சினேகாவுக்கு தலை சுற்றி மயக்கம் வந்தது. இதனால் படப்பிடிப்புத் தளத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.

இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஷூட்டிங் நிறுத்தப்பட்டு சினேகா முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு குளுக்கோஸ் ஏற்றினர். இதையடுத்து அவர் நலமடைந்தார். தொடர்ந்து இரவு பகலாக நடித்து வந்ததாலும், சரியாக சாப்பிடாத காரணத்தாலும்தான் மயக்கம் வந்திருக்கிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இப்போது மாத்திரைகளைப் போட்டபடி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளாராம் சினேகா. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் சினேகா, உடம்பு பத்திரம்!

Read more about: faint sneha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil