»   »  காலேஜ் கேர்ள் சோனியா சோனியா அகர்வால் நடிகர் முரளியின் பாலிசியை பின்பற்றுகிறார். அது என்ன என்று கேட்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை,முரளியைப் போலவே சோனியாவும் தொடர்ந்து பல படங்களில் கல்லூரி மாணவியாகவே நடித்து வருகிறார்.ஒரு காலத்தில் கோலிவுட்டை கலக்கி வந்த ஒரு காலேஜ் நடிகர் உண்டு. அவர் தான் முரளி. எத்தனையோ பேர் கோலிவுட்டில்வந்து போய்க் கொண்டிருந்தாலும் இவர் மட்டும் அசராமல் பீல்டை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.இத்தனைக்கும் இவர் நடிக்கும் படங்கள் ஒன்றும் பெரிதாக ஓடாது என்பது தான் அதில் விசேஷம். இவரது உருவ அமைப்பிற்குசிறிதும் பொருந்தாத நிலையிலும் அவர் பல வருடங்களாக தொடர்ந்து கல்லூரி மாணவராகவே வலம் வந்து கொண்டிருந்தார்.இப்போது இவருக்கு கோலிவுட்டில் அட்ரஸ் எதுவும் இல்லையென்றாலும் இன்னும் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறாராம் இவர்.இவரது பாலிசியைத் தான் இப்போது நம்ம சோனியா அகர்வாலும் பின்பற்றுகிறார். முதன்முதலில் அறிமுகமானசெல்வராகவனின் காதல் கொண்டேனில் கல்லூரி மாணவியாக வந்த இவர், இப்போதும் இந்த வேடத்தை விடுவதாக இல்லை.7ஜி ரெயின்போ காலனியிலும் இவர் கல்லூரி மாணவி தான். இப்போது சோனியா நடித்து வரும் ஒரு கல்லூரியின் கதை, கண்பேசும் வார்த்தைகள் ஆகிய படங்களிலும் இவருக்கு கல்லூரி மாணவி வேடம் தான்.என்ன, கடைசி வரை இப்படியே கல்லூரி மாணவியாகத் தான் நடிப்பது என யாருக்காவது சத்தியம் செய்து கொடுத்திருக்கிறீர்களாஎன்று அவரிடமே கேட்டோம்.எதிர்பாராதவிதமாக எனக்கு கல்லூரி மாணவி வேடங்களே கிடைத்து வருகின்றன. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?டைரக்டர் தருகிற வேடத்தில் தானே நடிக்க முடியும். கல்லூரி மாணவி வேடமாக இருந்தாலும் எனது ஒவ்வொரு படத்திலும்வெவ்வேறு விதமான அணுகுமுறைகள் இருக்கும்.எனவே இதைப் போய் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. அதனால் தான் நான் தொடர்ந்து கல்லூரிமாணவியாகவே நடித்து வருகிறேன் என்கிறார் சோனியா.

காலேஜ் கேர்ள் சோனியா சோனியா அகர்வால் நடிகர் முரளியின் பாலிசியை பின்பற்றுகிறார். அது என்ன என்று கேட்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை,முரளியைப் போலவே சோனியாவும் தொடர்ந்து பல படங்களில் கல்லூரி மாணவியாகவே நடித்து வருகிறார்.ஒரு காலத்தில் கோலிவுட்டை கலக்கி வந்த ஒரு காலேஜ் நடிகர் உண்டு. அவர் தான் முரளி. எத்தனையோ பேர் கோலிவுட்டில்வந்து போய்க் கொண்டிருந்தாலும் இவர் மட்டும் அசராமல் பீல்டை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.இத்தனைக்கும் இவர் நடிக்கும் படங்கள் ஒன்றும் பெரிதாக ஓடாது என்பது தான் அதில் விசேஷம். இவரது உருவ அமைப்பிற்குசிறிதும் பொருந்தாத நிலையிலும் அவர் பல வருடங்களாக தொடர்ந்து கல்லூரி மாணவராகவே வலம் வந்து கொண்டிருந்தார்.இப்போது இவருக்கு கோலிவுட்டில் அட்ரஸ் எதுவும் இல்லையென்றாலும் இன்னும் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறாராம் இவர்.இவரது பாலிசியைத் தான் இப்போது நம்ம சோனியா அகர்வாலும் பின்பற்றுகிறார். முதன்முதலில் அறிமுகமானசெல்வராகவனின் காதல் கொண்டேனில் கல்லூரி மாணவியாக வந்த இவர், இப்போதும் இந்த வேடத்தை விடுவதாக இல்லை.7ஜி ரெயின்போ காலனியிலும் இவர் கல்லூரி மாணவி தான். இப்போது சோனியா நடித்து வரும் ஒரு கல்லூரியின் கதை, கண்பேசும் வார்த்தைகள் ஆகிய படங்களிலும் இவருக்கு கல்லூரி மாணவி வேடம் தான்.என்ன, கடைசி வரை இப்படியே கல்லூரி மாணவியாகத் தான் நடிப்பது என யாருக்காவது சத்தியம் செய்து கொடுத்திருக்கிறீர்களாஎன்று அவரிடமே கேட்டோம்.எதிர்பாராதவிதமாக எனக்கு கல்லூரி மாணவி வேடங்களே கிடைத்து வருகின்றன. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?டைரக்டர் தருகிற வேடத்தில் தானே நடிக்க முடியும். கல்லூரி மாணவி வேடமாக இருந்தாலும் எனது ஒவ்வொரு படத்திலும்வெவ்வேறு விதமான அணுகுமுறைகள் இருக்கும்.எனவே இதைப் போய் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. அதனால் தான் நான் தொடர்ந்து கல்லூரிமாணவியாகவே நடித்து வருகிறேன் என்கிறார் சோனியா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சோனியா அகர்வால் நடிகர் முரளியின் பாலிசியை பின்பற்றுகிறார். அது என்ன என்று கேட்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை,முரளியைப் போலவே சோனியாவும் தொடர்ந்து பல படங்களில் கல்லூரி மாணவியாகவே நடித்து வருகிறார்.

ஒரு காலத்தில் கோலிவுட்டை கலக்கி வந்த ஒரு காலேஜ் நடிகர் உண்டு. அவர் தான் முரளி. எத்தனையோ பேர் கோலிவுட்டில்வந்து போய்க் கொண்டிருந்தாலும் இவர் மட்டும் அசராமல் பீல்டை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.

இத்தனைக்கும் இவர் நடிக்கும் படங்கள் ஒன்றும் பெரிதாக ஓடாது என்பது தான் அதில் விசேஷம். இவரது உருவ அமைப்பிற்குசிறிதும் பொருந்தாத நிலையிலும் அவர் பல வருடங்களாக தொடர்ந்து கல்லூரி மாணவராகவே வலம் வந்து கொண்டிருந்தார்.

இப்போது இவருக்கு கோலிவுட்டில் அட்ரஸ் எதுவும் இல்லையென்றாலும் இன்னும் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறாராம் இவர்.

இவரது பாலிசியைத் தான் இப்போது நம்ம சோனியா அகர்வாலும் பின்பற்றுகிறார். முதன்முதலில் அறிமுகமானசெல்வராகவனின் காதல் கொண்டேனில் கல்லூரி மாணவியாக வந்த இவர், இப்போதும் இந்த வேடத்தை விடுவதாக இல்லை.

7ஜி ரெயின்போ காலனியிலும் இவர் கல்லூரி மாணவி தான். இப்போது சோனியா நடித்து வரும் ஒரு கல்லூரியின் கதை, கண்பேசும் வார்த்தைகள் ஆகிய படங்களிலும் இவருக்கு கல்லூரி மாணவி வேடம் தான்.

என்ன, கடைசி வரை இப்படியே கல்லூரி மாணவியாகத் தான் நடிப்பது என யாருக்காவது சத்தியம் செய்து கொடுத்திருக்கிறீர்களாஎன்று அவரிடமே கேட்டோம்.

எதிர்பாராதவிதமாக எனக்கு கல்லூரி மாணவி வேடங்களே கிடைத்து வருகின்றன. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?டைரக்டர் தருகிற வேடத்தில் தானே நடிக்க முடியும். கல்லூரி மாணவி வேடமாக இருந்தாலும் எனது ஒவ்வொரு படத்திலும்வெவ்வேறு விதமான அணுகுமுறைகள் இருக்கும்.

எனவே இதைப் போய் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. அதனால் தான் நான் தொடர்ந்து கல்லூரிமாணவியாகவே நடித்து வருகிறேன் என்கிறார் சோனியா.


Read more about: college girl sonia

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil