»   »  சோனியாவின் பிகினி சண்டை!

சோனியாவின் பிகினி சண்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன் கடற்கரையில், ஆங்கிலம், இந்தி, செந்தமிழ் ஆகிய மொழிகளில் ஒரு செல்லச் சண்டை நடந்துள்ளது. செல்லமாக சிணுங்கி கொண்டவர்கள் சோனியா அகர்வாலும், இயக்குனர் சுசி. கணேசனும்.

திருட்டுப் பயலே. இது சுசி. கணேசன் இயக்கும் புதிய படம். காக்க காக்க வில்லன் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா ஆகியோர் ஜோடியாக நடிக்க உருவாகியுள்ள இப்படத்தின் சில காட்சிகள் மெல்போர்ன் கடற்கரையில் சுடப்பட்டன.

இப்படம் ணிழுக்க கிளாமர் காட்சிகளில் தூள் பரத்தியுள்ள சோனியா அகர்வால், மெல்போர்ன் கடற்கரையில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மட்டும் தூக்கலாக கிளாமர் காட்ட மறுத்ததால் வந்த சண்டைதான் மேலே சொன்னது.

காட்சி இதுதான். வெள்ளைக்காரிகளாகப் பார்த்து பார்த்து அலுத்துப் போய் கடற்கரையில் அமர்ந்திருக்கிறார்கள் ஜீவனும், அவரது தோஸ்துகளும். அப்போது அங்கே தேவதை மாதிரி வருகிறார் சோனியா அகர்வால்.


அடடா, நம்ம ஊரு தோலா இருக்கேன்னு உற்சாகமடைகிறார்கள் ஜீவன் அண்ட் கோ.

இதைத்தான் மெல்போர்ன் கடற்கரையில் சுட்டார் சுசி. கணேசன். படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் சந்திக்கும் ணிதல் காட்சியும் இதுதானாம்.

எனவே படு ரிச்சாக இது வர வேண்டும் என்பதற்காக சோனியாவுக்கு படு கிளாமரான பிகினி டிரஸ்ஸை செலக்ட் செய்து வைத்திருந்தார்.

கேமராமேனுக்கு கோணத்தை சொல்லிக் கொடுத்து விட்டு சோனியாவிடம் போனார் கணேசன்.

மேடாாாம், நீங்க போட வேண்டிய டிரஸ் இதுதான் என்று அவர் எடுத்துக் கொடுத்த டிரஸ்ஸைப் பார்த்த சோனியா பயந்து போய் விட்டாராம்.

அது டூ மச்சாக சின்னதாய் இருந்த ஒரு டூ பீஸ் பிகினியாம். சுத்தமான அக்மார்க் கிளாமருக்கு உத்தரவாதம் தரக் கூடிய வகையில் இருந்த நீச்சல் உடையை போடவே ணிடியாது என்று அடமாக கூறி விட்டார் சோனியா.


சோர்ந்து போன சுசி, இருந்தாலும் விடாமல் இதை நீங்கள் போட்டே ஆக வேண்டும். காட்சிக்கு அது கண்டிப்பா தேவை என்று பிடிவாதமாக கூறியுள்ளார். இப்படியாக இருவரும் கடற்கரையில் வைத்து கொஞ்ச நேரம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

கடைசியில் பிகினி போட ஓ.கே. ஆனால் கிளாமர் இல்லாத பிகினியாக கொண்டு வாங்க என்று சோனியா இறங்கி வர, பிகினின்னாலே கிளாமர்தான், இதுலே கிளாமர் இல்லாத பிகினிக்கு நான் எங்கே போவேன் என்று மண்டையை உடைத்துக் கொண்டதாம் யூனிட்.

கடைசியில் தயாரிப்பாளரிடம் பிரச்சனை போகவே, ஏதோ ஒரு சிங்கப்பூர் கடையில் போய் தேடிப் பிடித்து ஒரு பெரிய பிகினியை வாங்கி வந்தார்களாம்.

அதை அணிந்து கொண்டு காட்சியில் கலக்கலாக நடித்துக் கொடுத்தாராம் சோனியா.

ஒரு பிட்டு ..

சோனியாவை இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ள மறுத்து விட்டாராம் செல்வராகவன்.

இதனால் அப்செட் ஆகியுள்ள சோனியா, நிறையப் படங்களில் நடிக்க ணிடிவு செய்து, ஏற்கனவே வந்து நிராகரித்த வாய்ப்புகளை தேடிப் போய் மீண்டும் வாங்கிப் போட்டு வருகிறாராம்.

அமெரிக்கா-ஈரான் பிரச்சனை தீர்ந்தாலும் தீரும் இந்த செல்வராகவன்-சோனியா சண்டைக்கு தீர்வே இல்லப்பா.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil