»   »  "தங்கச்சி" ஸ்ரீதேவிகா!

"தங்கச்சி" ஸ்ரீதேவிகா!

Subscribe to Oneindia Tamil

ராமகிருஷ்ணாவில் அறிமுகமாகி, இரண்டாவது படமான அந்தநாள் ஞாபகத்தில் அட்டகாச கவர்ச்சியில் புகுந்து விளையாடிவரும் பாலக்காட்டு பால்கோவா ஸ்ரீதேவிகாவுக்கு சடாரென ஒரு சரிவு.

ஹீரோயினாக நடித்து வந்தவர், அடுத்து விஜய்யின் படத்தில் தங்கச்சியாக நடிக்கப் போகிறார். இந்தக் கூத்து நடப்பது சிவகாசிபடத்தில் தான்.

அகத்தியனின் ராமகிருஷ்ணாவில் ஜெய் ஆகாஷின் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ஸ்ரீதேவிகா. நச்சென்ற உடல்கட்டுடன், பளிச் என இருக்கும் ஸ்ரீதவிேகா, அந்தப் படம் ஊத்திக் கொண்டாலும் நன்றாகவே கவனிக்கப்பட்டார்.

கோடம்பாக்கம் அவர் மீது ஒரு கண் வைத்தது. இப்போது நடித்து வரும் அந்த நாள் ஞாபகம், அன்பே வா ஆகிய இருபடங்களிலும் இவர் காட்டும் தரிசனத்தைக் காண கோடிக் கண் வேண்டுமாம். பாடல் காட்சிகளி"ல் மாத்திரமல்லாமல், சாதாகாட்சிகளிலும் அவரது உடைகள் தாராளமயமாக்கப்பட்டுள்ளன.

கோடம்பாக்கத்தில் குச்சியை நாட்ட, கவர்ச்சிக் கொடி பிடித்தே ஆக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருப்பதால்,அம்புட்டுத்தானே.. இப்புடுச் சூடு என்று கவர்ச்சியில் கதி கலக்கி வருகிறார்.

முதலில் ரேவதி சேச்சி மாதிரி நானும் பேர் வாங்குவேன் என்று கூறியவர் தான். இப்போது அந்தப் பேச்சையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு, கூடவே டிரஸ்ஸையும் தூக்கிப் போட்டுவிட்டு கவர்ச்சி கோதாவில் முண்டா தட்டிக் கொண்டிருக்கிறார்.


இவரது திறமையை பார்த்து வியந்து போன சிவகாசி படத் தயாரிப்பாளர், ஸ்ரீதேவிகாவுக்கு தனது படத்தில் ஏதாவது ஒருவாய்ப்புத் தந்தே ஆவது என்ற முடிவுக்கு வந்தாராம். அவரை ஹீரோயினாக்க விஜய் ஒப்புக்க மாட்டார் என்பதால், விஜய்யின்தங்கச்சியாக நடிக்கச் சொல்லிவிட்டாராம்.

தங்கை வேடமா என்று முதலில் யோசித்தாராம் ஸ்ரீதேவிகா. ஆனால், தயாரிப்பாளரின் அன்புக்குக் கட்டுப்பட்டும், ஹீரோ விஜய்என்பதாலும் இதை வைத்து அதை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் ஓ.கே. சொல்லி விட்டாராம்.

(விஜய்க்கு திருப்பாச்சியில் மல்லிகாவை தங்கச்சியாக்கினார்கள், இப்போது ஸ்ரீதேவிகா.. அடுத்த தங்கச்சி ஸ்னேகாவோ?)

சரி, நாம் ஸ்ரீதேவிகா பத்திப் பார்ப்போம். பள பள என ஜிலிர்ப்பூட்டும் ஸ்ரீதேவிகாவிடம்,

எப்படி இப்படி ஒரு அழகு என்று கேள்வியைப் போட்டால், மனசுதான் காரணம் என்று தியானம் கிளாஸ் டீச்சர் மாதிரி விளக்கம்தருகிறார்.

நான் எப்பவுமே ஜாலியாத்தான் இருப்பேன் தெரியுமா?. சோகம், கவலை இதெல்லாம் எனக்குக் கெட்ட வார்த்தைகள். டிவியில்படம் பார்த்தாலும் காமெடிப் படமாகத்தான் பார்ப்பேன். எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவேன், சிரித்துக் கொண்டேதான்இருப்பேன் (?!?).

அதான் இளமையாக, எப்போதும் ஃபிரெஷ்ஷாக இருக்கிறேன் என்று கூறும் ஸ்ரீதேவிகாவுக்கு ஸ்ரீயிடம் ரொம்பப் பிடித்த விஷயம்எது தெரியுமா? அவரது உதடுதானாம்.

என்னோட உதடுகள் மிக அழகாக இருப்பதாக எனது தோழிகளும், என் அம்மாவும் கூறுவார்கள். அனைவருக்கும் பிடித்ததுஎன்பதால் எனக்கும் எனது உதடுகளை ரொம்பப் பிடிக்கும் (நமக்குந்தான் !)

நிறையப் படங்களில் நடித்து நடிப்பில் பெஸ்ட் என்றும் பெயர் வாங்குவேன் என்று நெஞ்சில் (அய்யோடா!) அடித்து கூறுகிறார்ஸ்ரீதேவிகா.


Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil