»   »  விஜய்க்கு "நோ" சொன்ன ஸ்ரீதேவிகா!

விஜய்க்கு "நோ" சொன்ன ஸ்ரீதேவிகா!

Subscribe to Oneindia Tamil

விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி டெட்டால் போட்டு கையை கழுவியுள்ளார் ஸ்ரீதேவிகா.

ஏன்? விஜய்க்கு தங்கச்சி ரோலில் நடிக்க கூப்பிட்டதால் தான் இந்த டெட்டால் வாஷ். முதலில் விஜய் படம் என்பதால் ஒப்புக்கொண்டுவிட்ட ஸ்ரீ தேவிகாவுக்கு அது தங்கச்சி வேடம் என்பதே லேட்டாகத்தான் தெரிய வந்ததாம்.

முதலில் செகண்ட் ஹீரோயின் என்று நினைத்து மண்டையை ஆட்டியவர், என் ஆச தங்கச்சி வேடம் என்றதும் ஓட்டமாய் ஓடிவந்துவிட்டாராம். ஆனால், அதற்குள் விஜய்குக்கு தங்கச்சியாக ஸ்ரீதேவிகா நடிக்கிறார் என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்துசெய்தியைப் பரப்பி விட்டுவிட்டார்கள்.

இதனால் அந்தச் செய்தியை மறுப்பதே இப்போது முழு நேர வேலையாக திரிகிறார் ஸ்ரீதேவிகா.

ஆட்டோகிராப் படத்தில் 3 நாயகியரில் ஒருவராக நடித்த மல்லிகாவுக்கு அதற்குப் பிறகு படங்களே வராத நிலையில்,திருப்பாச்சியில், விஜய்யின் தங்கச்சியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கொஞ்சம் கூட யோசிக்காமல் அதை ஏற்றுக் கொண்டார் மல்லிகா. நடிப்பிலும் கலக்கினார். திருப்பாச்சியில் அட்டகாசமாகநடிக்கப் போக இப்போது மல்லிகாவுக்கு கையில் சில படங்கள் உள்ளதாம்.

இப்போது விஜய் நடிக்கும் சிவகாசி படத்திற்கும் மல்லிகா போல ஹீரோயின் நடிகை ஒருவரை தங்கச்சியாகப் போடலாம் என்று(எல்லாம் சென்டிமென்ட்தான்) யோசித்துள்ளார்கள். அவர்களது யோசனையில் ஸ்ரீதேவிகா விழுந்துள்ளார்.

உடனே போனைப் போட்டு கேட்டுள்ளார்கள். விவரத்தை முழுவதுமாக வாங்காமல் நடிக்க ஒப்புக் கொள்வதாகக் கூறிவிடவே,விஜய்க்கு தங்கச்சி ஸ்ரீதேவிகா என்று செய்திகள் வர, அவரை ஹீரோயினாகப் போட முடிவு செய்திருந்த சில தயாரிப்பாளர்கள்என்ன இது? என்று குடைந்து எடுத்துவிட்டார்களாம்.

இதையடுத்து இம்முறை ஸ்ரீதேவிகாவே சிவகாசி தயாரிப்பாளருக்கு போனைப் போட்டு, இந்த ஆட்டைக்கு நான் வரலஎன்றிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து படத்தின் இயக்குனர் பேரரசுவே ஸ்ரீ தவிகாவை நேரடியாக தொடர்பு கொண்டு பேசி, நல்ல கேரக்டர், தங்கச்சிஎன்று தயங்க வேண்டாம் என்று கூறிப் பார்த்தாராம். அதற்கு, விஜய்க்கு இரண்டாவது ஹீரோயின் என்றால் கூடப் பரவாயில்லைசார், இப்போவே தங்கச்சி கேரக்டல் நடிக்க ஆரம்பித்தால் எனது எதிர்காலமே கண்ணீர்க் கோலமாகிவிடும் என்று புலம்பியுள்ளார்ஸ்ரீ.

இதனால் ஸ்ரீதேவிகாவை டிராப் செய்து விட்டு வேற தங்கச்சியைத் தேடி வருகிறார்களாம். யாரும் கிடைக்காவிட்டால்மல்லிகாவையே கூட புக் செய்யும் வாய்ப்பு உள்ளதாம்.

எதுக்கு இவ்வளவு குழப்பம் பேரரசு சார்.. டி.ராஜேந்தருக்கு ஒரு போனை போட்டு ஐடியா கேக்க வேண்டியது தானே...

அ.. உய்யயா.. உய்யா.. உல்லாலங்கடி உய்யா...


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil