»   »  கொஞ்சி பேச கூடாதா?

கொஞ்சி பேச கூடாதா?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஜி. இன்னொரு தெலுங்கு புது வரவு.

இவர் நடித்த முதல் படமான ஆயுள் ரேகை ரிலீஸ் ஆக தயார் நிலையில் இருக்க, அதற்குள் அடுத்த படத்தில் புக் ஆகி மாட்லாடவந்து விட்டார் ஸ்ரீஜி.

இயக்குனர் பிரம்மனின் டைரக்ஷனில் கொஞ்சி பேச கூடாதா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப் படத்தின் பூஜைசமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

ஏராளமான திரையுலக விஐபிக்கள் ஆஜராகியிருக்க மிக விமரிசையாக நடந்தது படத்தின் தொடக்க விழா.

தமிழ் சினிமாவில் எம்.சி.ஏ., எம்.பி.ஏக்களின் வரவுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் படத்திலும் ஒரு எம்பிஏ ஹீரோஅறிமுகமாகிறார். பெயர் கண்ணன். ஆர்யா, மூர்யா, ரவிகிருஷ்ணா என்று தமிழ்ப் பேசத் தெரியாத இந்தி, தெலுங்குவாலாக்கள்படையெடுப்பு கோடம்பாக்கத்தில் அதிகரித்து வரும் நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின் தமிழ்நாட்டில் இருந்தே ஒரு ஹீரோதமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார்.

கரேத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ள கண்ணன், குங்பூ உள்ளிட்ட அடிதடி கலைகளிலும் வல்லவர்.

கே.சி. முனிராஜ், பி.வி. சீனிவாசன் ஆகியோர் தயாரிக்க படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பிரம்மன்.

ஒளிப்பதிவை ஆர். செல்வா கவனிக்கிறார். நல்லதம்பி என்ற புதுமுக இசையமைப்பாளரின் பின்னணி இசையில் பாடல்கள்அனைத்தையும் எழுதியிருக்கிறார் சினேகன். கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா என்று த்ரிஷாவை உச்சத்தில் போய்நிறுத்திய பாடல், பாண்டவர் பூமியில் அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் உள்பட பல சக்ஸஸ்புல்பாடல்களை எழுதியவர் சினேகன்.


சமீபத்தில் வெளியான ராம் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ள சினேகன் இதிலும் பாடல்களில்அசத்தியிருக்கிறார். இசையும் பாடல்களும் கலக்கலாக வந்திருப்பதாய் சொல்கிறார்கள்.

படத்தின் இணை இயக்குனர் சோழன். இவர் கன்னடத்தில் காதிருவேன் நினகாகி என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர்.தமிழில் விஜய்காந்தின் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதில் பிரம்மனுக்கு உதவியாககளமிறங்கியிருக்கிறார்.


இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக ராஜ் நடிக்கிறார். இவர் கேம்பஸ் படத்தில் அறிமுகமானவர்.

ஹீரோயினாக அறிமுகமாகும் ஸ்ரீஜிக்கு நடிப்போடு கிளாமரும் நன்றாகவே வருகிறது. ஆயுள் ரேகை படத்தில் நல்ல நடிப்போடுஅழகையும் அள்ளிக் கொட்டி நடித்திருக்கிறாராம். அதே போல கொஞ்சி பேசக் கூடாதாவிலும் அவர் தனது கவர்ச்சியால்நம்மையும் கொஞ்ச இருக்கிறார்.

நல்ல உயரத்தோடு, இன்னபிற விஷயங்களோடு அட்டகாசமாய் வலம் வரும் ஸ்ரீஜிக்கு தமிழில் பெரிய ரவுண்டு வரஆசையாம். இதனால் கவர்ச்சி விஷயத்தில் எந்த கண்டிசனும் போடாமல் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.

பிரம்மன், சோழன், கண்ணன், ஸ்ரீஜி என முழுக்கவும் இளைஞர் பட்டாளம் இணைந்து மேற்கொண்டுள்ள முயற்சி கொஞ்சி பேசக்கூடாதா.

சூட்டிங்கை மடமடவென முடித்து விரைந்து ரிலீஸ் செய்யும் திட்டத்தில் வேகமாய் இருக்கிறது யூனிட்.


Read more about: sriji in konji pesa koodatha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil