»   »  சுருட்டும் ஸ்ருதி!

சுருட்டும் ஸ்ருதி!

Subscribe to Oneindia Tamil

கும்முன்னு ஒரு பொண்ணு இருந்தா எப்படி இருக்கும்? முருகா நாயகி ஸ்ருதி சர்மா மாதிரி இருக்கும்!

முருகா இன்று திரைக்கு வந்துள்ளது. ஆனால் அதற்கு முன்பே பிரபலமாகி விட்டார் ஸ்ருதி சர்மா. க்யூட் முகம், அட்டகாச அழகு, அசத்தல் உடல்வாகு என பக்காவாக இருக்கிறார் இந்த பப்ளி பாப்பா.

ஸ்ருதியின் முகம்தான் அவரது முதல் பிளஸ் பாயிண்ட்டே. படு வசீகரமாக இருக்கும் ஸ்ருதிக்கு முதல் படம்தான் முருகா. படம் முழுக்கபட்டையைக் கிளப்பியுள்ளர்.

படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி விட்ட நிலையில், அதற்கு ஸ்ருதி சர்மா போட்டுள்ள ஆட்டமும் அமர்க்களமாக இருக்கிறது.பலரிடம் எல்லாம் இருந்தும் ஏதாவது ஒன்று குறை இருக்கும். ஆனால் ஸ்ருதியிடம் அப்படி எதுவும் இல்லை என்பதுதான் பெரிய விஷயம்.

கிளாமர், மாடர்ன் கெட்டப் என எல்லாவற்றுக்கும் ரெடியாக இருக்கிறாராம் ஸ்ருதி சர்மா. முருகா பட ஸ்டில்களைப் பார்த்தாலே இது தெளிவாகத்தெரியும்.

பார்க்கத்தான் சின்னப் பொண்ணாக தெரிகிறார் ஸ்ருதி. ஆனால் பாய்ச்சல் எல்லாம் பெரியதனமாக இருக்கிறது. குத்தாட்டம், முத்தாட்டம்,பித்தாட்டம் என எல்லா வகையான ஆட்டமும் ஸ்ருதிக்கு படு லாவகமாக வருகிறதாம். பொம்மலாட்டம் மட்டும்தான் இன்னும் ஆடலை!

படத்துக்கு முருகான்னு பெயரை வைத்து விட்டு ஒரு ஹீரோயினோட நின்றால் எப்படி? ஸ்ருதியோடு சேர்ந்து படத்துக்கு சுதி ஏற்றியுள்ளார்சமிக்ஷா. சகலவித கிளாமர் கில்லாடித்தனத்திற்கும் தயாராக உள்ளவர் சமிக்ஷா.

அறிந்தும் அறியாமலும் அட்டகாசமாக ஓடியும் கூட சமிக்ஷா சரியாக அறியப்படாமல், புரியப்படாமல் போய் விட்டார். இடையில் மெர்க்குரிப்பூக்களில் 2வது ஹீரோயினாக, படு கிளாமராக வந்து போனார். இப்போது முருகாவிலும் சமிக்ஷாவை அப்படியே பயன்படுத்தியுள்ளனர்.

ஸ்ருதி, சமிக்ஷா என இரு அழகுக் குயில்களுடன் ஆடிப் பாடிய மச்சக்கார மச்சான் பெயரை சொல்லவில்லையே! பார்ட்டியின் பெயர் மகேஷ்,மங்களகரமாக இருக்கிறார். ஸ்ருதியுடன் சேர்ந்து மஜா காட்டி ஆட்டமும் போட்டுள்ளார். முகத்தில் ஒட்டியுள்ள தாடியை சொரண்டி எடுத்துவிட்டால் பால் வடியும் முகம் மகேஷுக்கு.

ஸ்ருதி சர்மா, சுருட்டிட்டம்மா!

Read more about: sruthi in muruga
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil