For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜில் ஜில் சுருதி காலையில் செடியில் இருந்து பறித்து, அப்படியே ப்ரீசரில் வைக்கப்பட்ட தக்காளி மாதிரி இருக்கிறார் மல்ஹோத்ரா. சுருதிமல்ஹோத்ரா.மில்க் ஷேக் மீது மிதக்கும் ஐஸ்க்ரீம் மாதிரி சும்மா கலர்புல்லாய் ஜில்லிடுகிறார்.மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தவர் இந்திப் படங்களில் நுழைய முயன்று, ஆல்பத்தை சுற்றில் விட்டபோதுகோலிவுட்டில் இருந்து போன மீடியேட்டர்களின் கண்களில் சிக்கி தமிழ் சினிமாவுக்கு வந்துவிட்டார்.கேப்டன் விஜய்காந்தின் சொந்தத் தயாரிப்பான சுதேசியில் அறிமுகமாகிறார் ஸ்ருதி. கேப்டனுக்கு கொஞ்ச காலமாகவே டபுள்ஹீரோயின் மேனியா என்ற ரொம்ப மோசமான அதே நேரத்தில் ரொம்ப பாசமான நோய் ஏற்பட்டிருப்பது உங்களுக்கு எல்லாம்தெரிந்தது தான்.அந்த வகையில் சுதேசியில் ஹீரோயினாக ஆஷிமா, அஸிஸ்டெண்ட் ஹீரோயினாக ஸ்ருதி மல்ஹோத்ரா ஆகியோர்நடிக்கிறார்கள். தமிழுக்காக உயிரையே தருவேன் என்று டயலாக் பேசும் விஜய்காந்தின் இந்த இரண்டு ஹீரோயின்களுக்கும்நாக்கில் சூடத்தைக் கொளுத்தி வைத்தால் கூட தமிழ் பேச வராது என்பது குறிப்பிடத்தக்கது.சுதேசியின் உபயத்தால் டமிள் பிலிமில் நடிக்க வந்துள்ள மல்ஹோத்ராவுக்கு தமிழில் நிரந்தர இடம் பிடிக்க ஆசைவந்துவிட்டதாம். டெல்லியைச் சேர்ந்த சிம்ரன், மும்பையைச் சேர்ந்த குஷ்பு ஆகியோர் கோலோச்சியதைப் போல தமிழில் தானும்நீண்டு, நிலைத்து நடிக்க ஆசையாக இருக்கிறாராம்.இதனால், முதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தனக்கென சில ஆட்களைப் பிடித்து அடுத்தடுத்த படவாய்ப்புகளுக்கு வலை வீசி விட்டிருக்கிறார்.அவர்களும் சுதேசி படத்தில் சுருதி காட்டியுள்ள கிளாமர் ஆல்பத்தைத் தூக்கிக் கொண்டு கோலிவுட்டில் வாய்ப்பு கேட்டு அலையஆரம்பித்துவிட்டனர். அத்தோடு மாடலிங்கின்போது எடுக்கப்பட்ட அஜால் குஜால் படங்களையும் கோலிவுட்டுக்குள் சுற்றுக்குவிட்டு சூடேற்றிக் கொண்டிருக்கிறார் சுருதி.அவரது முயற்சிகள் பலிக்க வாழ்த்துவோம்.ஒரு பக்கம் அரசியல் வேலை, இன்னொரு பக்கம் சொந்தப் பணத்தில் சுதேசி சினிமா என்று படு பிஸியாக இருக்கிறார்விஜய்காந்த். சூட்டிங் இரவு பகலாக படு வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.ஹீரோயின் ஆஷிமாவுக்கு இணையாக சுருதியும் கேப்டனுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறாராம்.கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் சமீபத்தில் இந்தப் படத்தின் ஒரு சண்டைக் காட்சி படமானது. சுவரேஇல்லாத இடத்திலும் கூட கேப்டன் காலைத் தூக்கி, எகிறி, குதித்து சண்டை போட்டுக் கொண்டிருந்ததை பார்க்க ரொம்பவேசுவாரஸ்மாக இருந்தது.படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருக்கிறது.

  By Staff
  |

  காலையில் செடியில் இருந்து பறித்து, அப்படியே ப்ரீசரில் வைக்கப்பட்ட தக்காளி மாதிரி இருக்கிறார் மல்ஹோத்ரா. சுருதிமல்ஹோத்ரா.

  மில்க் ஷேக் மீது மிதக்கும் ஐஸ்க்ரீம் மாதிரி சும்மா கலர்புல்லாய் ஜில்லிடுகிறார்.

  மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தவர் இந்திப் படங்களில் நுழைய முயன்று, ஆல்பத்தை சுற்றில் விட்டபோதுகோலிவுட்டில் இருந்து போன மீடியேட்டர்களின் கண்களில் சிக்கி தமிழ் சினிமாவுக்கு வந்துவிட்டார்.

  கேப்டன் விஜய்காந்தின் சொந்தத் தயாரிப்பான சுதேசியில் அறிமுகமாகிறார் ஸ்ருதி. கேப்டனுக்கு கொஞ்ச காலமாகவே டபுள்ஹீரோயின் மேனியா என்ற ரொம்ப மோசமான அதே நேரத்தில் ரொம்ப பாசமான நோய் ஏற்பட்டிருப்பது உங்களுக்கு எல்லாம்தெரிந்தது தான்.


  அந்த வகையில் சுதேசியில் ஹீரோயினாக ஆஷிமா, அஸிஸ்டெண்ட் ஹீரோயினாக ஸ்ருதி மல்ஹோத்ரா ஆகியோர்நடிக்கிறார்கள். தமிழுக்காக உயிரையே தருவேன் என்று டயலாக் பேசும் விஜய்காந்தின் இந்த இரண்டு ஹீரோயின்களுக்கும்நாக்கில் சூடத்தைக் கொளுத்தி வைத்தால் கூட தமிழ் பேச வராது என்பது குறிப்பிடத்தக்கது.

  சுதேசியின் உபயத்தால் டமிள் பிலிமில் நடிக்க வந்துள்ள மல்ஹோத்ராவுக்கு தமிழில் நிரந்தர இடம் பிடிக்க ஆசைவந்துவிட்டதாம். டெல்லியைச் சேர்ந்த சிம்ரன், மும்பையைச் சேர்ந்த குஷ்பு ஆகியோர் கோலோச்சியதைப் போல தமிழில் தானும்நீண்டு, நிலைத்து நடிக்க ஆசையாக இருக்கிறாராம்.

  இதனால், முதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தனக்கென சில ஆட்களைப் பிடித்து அடுத்தடுத்த படவாய்ப்புகளுக்கு வலை வீசி விட்டிருக்கிறார்.

  அவர்களும் சுதேசி படத்தில் சுருதி காட்டியுள்ள கிளாமர் ஆல்பத்தைத் தூக்கிக் கொண்டு கோலிவுட்டில் வாய்ப்பு கேட்டு அலையஆரம்பித்துவிட்டனர். அத்தோடு மாடலிங்கின்போது எடுக்கப்பட்ட அஜால் குஜால் படங்களையும் கோலிவுட்டுக்குள் சுற்றுக்குவிட்டு சூடேற்றிக் கொண்டிருக்கிறார் சுருதி.

  அவரது முயற்சிகள் பலிக்க வாழ்த்துவோம்.


  ஒரு பக்கம் அரசியல் வேலை, இன்னொரு பக்கம் சொந்தப் பணத்தில் சுதேசி சினிமா என்று படு பிஸியாக இருக்கிறார்விஜய்காந்த். சூட்டிங் இரவு பகலாக படு வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

  ஹீரோயின் ஆஷிமாவுக்கு இணையாக சுருதியும் கேப்டனுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

  கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் சமீபத்தில் இந்தப் படத்தின் ஒரு சண்டைக் காட்சி படமானது. சுவரேஇல்லாத இடத்திலும் கூட கேப்டன் காலைத் தூக்கி, எகிறி, குதித்து சண்டை போட்டுக் கொண்டிருந்ததை பார்க்க ரொம்பவேசுவாரஸ்மாக இருந்தது.

  படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருக்கிறது.


  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X