ஒரே மேடையில் ஷங்கரும் ராஜமெளலியும்.. பிரம்மாண்டமாக நடைபெற்ற ராம்சரணின் RC15 பட பூஜை!

ஹைதராபாத்: இயக்குநர் ஷங்கரின் நேரடி தெலுங்கு படமான RC15 படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது.

டோலிவுட் நடிகர் ராம்சரண் மற்றும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ள இந்த படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார்.

பிரம்மாண்ட பட பூஜை விழாவில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தெலுங்குக்கு போன ஷங்கர்

தெலுங்குக்கு போன ஷங்கர்

ஜென்டில்மேன் தொடங்கி இந்தியன் 2 வரை தமிழில் கோலிவுட் ஹீரோக்களை மட்டுமே வைத்து பிரம்மாண்ட படங்களை இயக்கி வந்த இயக்குநர் ஷங்கர் நேரடி தெலுங்கு படமாக டோலிவுட் நடிகர் ராம்சரணை அடுத்ததாக இயக்க உள்ளார். அதன் பிரம்மாண்ட பட பூஜை விழா இன்று நடைபெற்றது.

ராம்சரணின் 15வது படம்

ராம்சரணின் 15வது படம்

இயக்குநர் ராஜமெளலியின் மகதீரா படத்தைத் தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் ராம்சரண் தனது 15வது படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் படத்தைத் தொடர்ந்து ராம்சரணின் அடுத்த படமும் பான் இந்திய படமாக பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.

கோட்சூட்டில் கியாரா அத்வானி

கோட்சூட்டில் கியாரா அத்வானி

பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகை கியாரா அத்வானி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள RC15 படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஹைதராபாத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்ற பட பூஜையில் கோட்சூட் அணிந்து செம கெத்தாக கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஷங்கருடன் ராஜமெளலி

ஷங்கருடன் ராஜமெளலி

இந்தியாவின் இரு பெரும் பிரம்மாண்ட இயக்குநர்களான ஷங்கரும் ராஜமெளலியும் ராம்சரணின் 15வது பட பூஜைக்காக ஒரே மேடையில் பங்கேற்றிருப்பது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இயக்குநர் ஷங்கர் உடன் ராஜமெளலி சிரித்து பேசும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Recommended Video

தங்கச்சி பாசம் அதான் ஓடிவந்துட்டேன் | Actor Sasikumar | Robo Shankar | 3C Showroom | Filmibeat Tamil
ரன்வீர் சிங்கும் ஆஜர்

ரன்வீர் சிங்கும் ஆஜர்

இயக்குநர் ஷங்கர் டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் இந்தி ரீமேக்கை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், இன்றைய பட பூஜை விழாவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் கலந்து கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

வேற லெவல் எதிர்பார்ப்பு

வேற லெவல் எதிர்பார்ப்பு

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த படம் பாகுபலி படம் போல மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த படம் பாகுபலி படம் போல மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X