மீண்டும் தொடங்கியது ஆர்ஆர்ஆர் ஷூட்டிங்.. படக்குழு வெளியிட்ட ஆச்சரிய வீடியோ.. மிரட்டலா இருக்கே!

By

சென்னை: ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.

பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம், இரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர்ஆர்ஆர்).

தெலுங்கு ஹீரோக்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

400 கோடி பட்ஜெட்

400 கோடி பட்ஜெட்

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது என்று கூறப்படுகிறது. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை டிவிவி என்டர்டெயின்மென்ட் சார்பில் டி.வி.வி தனய்யா தயாரிக்கிறார். இந்தி நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உட்பட பலர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்புகள்

படப்பிடிப்புகள்

ஹாலிவுட் நடிகர் ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

லாக்டவுன் தளர்வு

லாக்டவுன் தளர்வு

கொரோனா லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இந்நிலையில் இப்போது நாடு முழுவதும் லாக்டவுனில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஷூட்டிங்

மீண்டும் ஷூட்டிங்

இதையடுத்து நேற்று முதல் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. ஷூட்டிங் தொடங்கியதற்கான அசத்தல் வீடியோவை படக்குழுவினர் தங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

கிருமி நாசினி

அதில், படத்துக்காக போடப்பட்ட பிரமாண்ட செட்டை திறந்து சுத்தம் செய்வது போலவும் பழைய மாடல் காரை தூசிப்பறக்க எடுப்பது, அடுக்கி வைக்கப்பட்ட பழங்கால துப்பாக்கிகளை சுத்தம் செய்வது, கிருமி நாசினி தெளிப்பது, டெம்பரேச்சர் சோதனை, ராஜமவுலி ஆக்‌ஷன் சொல்வது அந்த வீடியோவே மிரட்டலாக இருக்கிறது.

ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர்

அடுத்த 2 மாத காலம் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் பீம் கேரக்டருக்கான டீஸர் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X