வேட்டி சட்டையில் சிம்பு.. மஞ்ச சுடிதாரில் கயாடு லோஹர்.. கூடவே சந்தானம்.. STR 49க்கு பூஜை போட்டாச்சு!

சென்னை: பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு, கயாடு லோஹர், சந்தானம், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகவுள்ள எஸ்டிஆர் 49 படத்துக்கான பூஜை இன்று போடப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

மணிரத்னம் போல சின்சியரான இயக்குநர்கள் இருந்தால் தானும் சின்சியராக படங்களை சீக்கிரம் முடித்துக் கொடுத்துவிட்டு தன்னுய ரசிகர்களை சந்தோஷப்படுத்துவேன் என சமீபத்தில் நடைபெற்ற தக் லைஃப் படத்துக்கான புரமோஷனில் பேசியிருந்தார்.

STR 49 Pooja stills Simbu Kayadu Lohar santhanam and Sai Abhyankkar spotted

ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் போன்ற திறமையான நடிகர்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் பார்க்கிங் படத்தை சொன்ன நேரத்தில் எடுத்துக் கொடுத்து வெற்றி வாகை சூடிய ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் தான் அடுத்ததாக சிம்பு நடிக்கவுள்ளார்.

வரிசை கட்டி நிற்கும் படங்கள்: மேலும், சிம்புவின் கனவுப்படமாக உருவாகவுள்ள அவரது 50வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். பல ஆண்டுகளாக தனது அடுத்த படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க வேண்டும் என போராடி வருகிறார். அந்த படம் வெளியானால் இவரும் நாக் அஸ்வின் போல உச்சத்துக்கு செல்வார் என்கின்றனர். மேலும், டிராகன் வெற்றியைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து சிம்புவின் 51வது படத்தை இயக்கப் போகிறார். குறைந்த பட்ஜெட்டில் தேவையில்லாமல் காட்சிகளை கூட எடுக்காமல் கச்சிதமாக படம் எடுத்து பிளாக்பஸ்டர் கொடுக்கக்கூடிய அஷ்வத்தும் சிம்புவுக்கு ஏற்ற இயக்குநர் தான். மேலும், சிம்பு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றும் விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்கப் போகிறார் என்றும் ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

எஸ்டிஆர் 49 பூஜை போட்டாச்சு: ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் இன்னும் 2 மாதங்கள் தாமதமாகும் என்றெல்லாம் வதந்திகள் கிளம்பி வந்த நிலையில், அதிரடியாக பூஜை போட்டு படப்பிடிப்பை இன்று படக்குழு தொடங்கிவிட்டனர். இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இன்று நடைபெற்ற பூஜையிலும் அவர் பங்கேற்றார்.

STR 49 Pooja stills Simbu Kayadu Lohar santhanam and Sai Abhyankkar spotted

வேட்டி சட்டையில் சிம்பு: நடிகர் சிம்பு தக் லைஃப் படத்தின் புரமோஷனுக்காக ஒரு பக்கம் படு பிசியாக இருந்தாலும், தனது அடுத்த படத்தை இன்று பூஜை போட்டு ஆரம்பித்துள்ளார். வேட்டி சட்டையில் படபூஜைக்கு சிம்பு வந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தானம் மற்றும் விடிவி கணேஷ் உடன் இந்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இருவரும் பூஜையில் பங்கேற்றனர்.

மங்களகரமாக வந்த கயாடு லோஹர்: வேட்டி சட்டையில் சிம்பு பட பூஜைக்கு வந்த நிலையில், மஞ்சள் நிற சுடிதார் அணிந்துக் கொண்டு சிம்புவுக்கு அருகே வந்து கயாடு லோஹர் நின்ற காட்சிகள் ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக டிராகன் படத்தில் நடித்த கயாடு லோஹர் அடுத்ததாக அதர்வாவுக்கு ஜோடியாக இதயம் முரளி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சிம்புவின் எஸ்டிஆர் 49 படத்திலும் இவர் தான் ஹீரோயின். மேலும், பல முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் கயாடு லோஹரை ஒப்பந்தம் செய்ய போட்டிப்போட்டு வருவதாக கூறுகின்றனர். படப்பிடிப்பை வேகமாக முடித்து இந்த வருட இறுதிக்குள் ரிலீஸ் செய்தால் சிறப்பான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X