»   »  சுபாவும் 6 டேக்குகளும்

சுபாவும் 6 டேக்குகளும்

Subscribe to Oneindia Tamil
சுபா புஞ்சாவின் உதடு நிச்சயம் கன்னிப் போயிருக்கும். பின்னே, அந்த பிஞ்சு உதட்டில் 6 தடவை நச் நச்சென என ஹீரோஅழுத்தமாக முத்தமிட்டால் என்னவாகும்?

வெயிட், கற்பனைக் குதிரையை ரொம்ப ஓட விடாதீங்க. ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடந்த சண்முகா படப்பிடிப்பில்தான் இந்தகுளு குளு காட்சி.

காட்சிப்படி சுபாவுக்கு, ஹீரோ ரிச்சர்ட் (அஜீத்தின் மாப்ளே), உதட்டில் அழுத்தமாக முத்தமிட வேண்டும். ரொம்ப சிம்பிளானகாட்சிதான், ஆனால் இயக்குனர் அதை 6 டேக்குகள் வரை வாங்கி விட்டார். ரிச்சர்டுக்கு பிரச்சினையில்லை, ஆனால் புஞ்சாதான்கொஞ்சம் பிஞ்சு போய் விட்டார்.

முதல் டேக்கில், சுபாவை கட்டிப் பிடித்து, அவரது உதடுகளில் ரிச்சர்ட் அழுத்தமாக ஒரு முத்தமிட்டார். காட்சி ஓ.கே என்றுஎல்லோரும் நினைத்தபோது, ரிச்சர்ட் முகத்தில் எக்ஸ்பிரஷன் சரியாக வரவில்லை என்று இரண்டாவது டேக் போனது. அதிலும்திருப்தி வரவில்லை இயக்குனர் யுவனுக்கு.

தொடர்ந்து 3, 4 என்று ஆகி 6 வது டேக்கில்தான் முத்தம் ஓ.கே. ஆனது.

கொடுத்துக் களைத்துப் போய் ரிச்சர்டும், கன்னிப் போன உதடுகளுடன் சுபாவும் தங்களது இருக்கைகளில் போய் சாய்ந்தார்கள்.யுவனை ஓரங்கட்டி, இதெல்லாம் நியாயமா, பாவமில்லையா புஞ்சா என்றோம்,

அது எப்படி பாஸ், முத்தமிடும்போது என்ன மாதிரியான உணர்ச்சிகள் முகத்தில் தெரியுமோ, அது வந்தால்தானே தத்ரூபமாகஇருக்கும். அதான், 6 டேக்குகள் வாங்க வேண்டியதாப் போச்சு என்றார் யுவன்.

அது சரி என்று ரிச்சர்டிடம் போய் எப்படி இருந்துச்சு என்று கேட்டால், முதல் டேக்கிலேயே இதை முடித்திருக்கலாம். ஆனாலும் 6டேக்கும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது என்று கண்ணடித்தார். (ஆமா உங்களுக்கு என்ன போச்சு?)

இதைப்பற்றி சுபாவிடம் கேட்கலாம் என்று போனால், கொஞ்சம் கோபமாகவே உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

யார் மேலே கோபம்?, 6 டேக்குடன் நிறுத்திவிட்ட டைரக்டர் மீதா என்று கேட்க வாய் வந்தது, ஆனால் மனசு வரவில்லை.

சுபா வயசு கம்பி தான் என்றாலும் இந்தமாதிரி விஷயங்களில் சின்னப் பாப்பா இல்லை. அவர் ஒரு பெரிய பாப்பா என்பதை"திருடிய இதயத்தை" படத்தில் நிரூபித்திருக்கிறார்.

முதல் படமான "மச்சி" படுத்துவிட்டதால், திருடிய இதயத்தில் படத்தில் ஹீரோ ரோஹனுடன் (ஷெரீனின் மாஜி காதலர்) பெட்ரூம்காட்சி உள்பட பல அஜால் காட்சிகளில் அநாயசமாக நடித்திருக்கிறார்.

பெட்ரூம் காட்சியை சென்னையை விட்டு ஒதுக்குப்புறத்தில் உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு பங்களாவில் வைத்துஷூட் செய்தார்களாம். கொஞ்சம் கொஞ்சம் பார்த்து, கொஞ்சம் கொஞ்சம் சிரித்து என்று தொடங்கும் பாடல் காட்சி அது.

இதில் சுபா கொடுத்த ஒத்துழைப்பு ரொம்ப ரொம்ப அதிகம் என்கிறார்கள். இந்த படுக்கை பாடல் நிச்சயம் சென்சாரில் தப்பாதுஎன்கிறார்கள். அவ்வளவு ஜூடாம் !. அய்யோடா...

Read more about: shanmugha, subha punja
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil