»   »  14 பேரிடம் பட்ட பாடு - சுகன்யாவின் பரிதாபக் கதை!

14 பேரிடம் பட்ட பாடு - சுகன்யாவின் பரிதாபக் கதை!

Subscribe to Oneindia Tamil

மலையாள டிவி தொடர் தயாரிப்பாளர்கள் 14 பேரிடம் சிக்கி செக்ஸ் டார்ச்சரை அனுபவித்ததாக நடிகை கன்யா பரபரப்பாக தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் கன்யா. தமிழில் முன்னணிநடிகையாக திகழ்ந்த கன்யாவுக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் அவர் டிவி தொடர்களில் நடிக்கிறார். மலையாளத்தில் அவர் ஒரு தொடரில் நடித்திருந்தார்.அந்தத் தொடர் ஏசியாநெட் தொலைக்காட்சியில் வெளியாகி மலையாள மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந் நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சலீம் என்பவர் உள்ளிட்ட 14 பேர் சுகன்யாவின் தந்தையைஅணுகி தங்களது தொடரில் கன்யா நடிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அவர்களிடம் கன்யாவின் தந்தை கதை கேட்டுதிருப்தியடைந்து ரூ. 15,000 அட்வான்ஸ் வாங்கிக் கொண்டார்.

இந் நிலையில் திடீரென டிவி தயாரிப்பாளர்கள் 14 பேரும் தன்னிடம் செக்ஸ் முறைகேட்டில் ஈடுபட முயன்றதாக சுகன்யாபரபரப்பு புகாரைத் தெரிவித்தார். இதுதொடர்பாக கண்ணூ<ர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகாரும்கொடுத்தார்.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து சுகன்யா கூறுகையில், நானும் எனது தாயாரும் இருட்டி என்ற இடத்திற்குஷூட்டிங் சென்றோம். கண்ணூ<ரை அடுத்துள்ள கண்ணவாத்து என்ற இடத்தில் இந்த இருட்டி மலைப் பகுதி உள்ளது.

படப்பிடிப்பு தொடங்கியதுமே 14 தயாரிப்பாளர்களும் என்னிடம் தவறாகப் பேசத் தொடங்கினர். தங்களுடன் அட்ஜெஸ்ட்செய்து போக வேண்டும், தங்களது விருப்பத்திற்கு இணங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

இதைக் கேட்டதும், நானும், எனது தாயாரும் அதிர்ச்சி அடைந்தோம். ஷூட்டிங் நடந்த பகுதி ஆள் அரவமற்ற மலைப் பகுதிஎன்பதால் எப்படித் தப்பிப்பது என்றும் தெரியவில்லை. 14 பேரும் அங்கு என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தனர். இதைப் பார்த்துஎனது தாயார் கதறி அழுதார்.

எனது முழு சக்தியையும் பயன்படுத்தி அவர்களை எதிர்த்துப் போராடி அங்கிருந்து எப்படியோ தப்பி வந்தேன். அப்போது நான்பட்ட சித்திரவதைகளை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

இது என்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் மோசமான அனுபவம். அந்த படபடப்பு இன்னும் எனக்கு அடங்கவில்லை.

இனிமேல் கால்ஷீட் கேட்டு யார் வந்தாலும் நன்றாக விசாரித்த பின்னரே கொடுக்க முடிவு செய்துள்ளேன் என்றார் சுகன்யா.

இந்த சம்பவம் குறித்து கண்ணூ<ர் இன்ஸ்பெக்டர் பிர்தோஸ் கூறுகையில், ஒரு நடிகை தன்னை 14 தயாரிப்பாளர்கள் சேர்ந்துகற்பழிக்க முயன்றதாக புகார் கொடுத்துள்ளது மிகப் பெரிய விஷயம். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

டிஜிபி வரை இந்தப் பிரச்சினை சென்றுள்ளது. தீவிரமாக விசாரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகன்யாவிடம்விசாரித்தபோது, கிழவி போல வேடம் போடச் சொன்னதாகவும், அதற்கு மறுத்ததால், அட்வான்ஸ் வாங்கி விட்டு நடிக்கமறுக்காதே, முடியாவிட்டால் எங்களுடன் சந்தோஷமாக இரு என்று கூறியதாக வேதனையுடன் தெரிவித்தார் என்றார் பிர்தோஸ்.

மலையாள காம வெறி தயாரிப்பாளர்களின் செக்ஸ் கொடுமையிலிருந்து தப்பி மீண்டுள்ள சுகன்யா விவகாரம் கேரளாவில்மட்டுமின்றி தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Read more about: sex torture for suganya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil