For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரஜினியின் புது வில்லன்! சிவாஜி படத்தில் ரஜினியின் வில்லனாக நடிக்க, அவருடன் தீ படத்தில் தம்பியாக நடித்த சுமன், பேசி முடிச்சாச்சாம்.ஷங்கர் இயக்கம், ஏவி.எம். தயாரிப்பு என சிவாஜி பிரமாண்டமாக உருவாகி வருகிறது.ஹைதராபாத்திலேயே பெரும்பாலான காட்சிகளை சுட்டெடுத்த நிலையில் சென்னையிலும் படப்பிடிப்பு வையுங்கள், எங்களுக்கு வேலை கொடுங்கள் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ரஜினிக்கு நேரடியாக கோரிக்கை வைத்தது.ஆகா.. இது ஒரு பிரச்சனை ஆகிவிடுமோ என்று யோசித்த ரஜினி, அவர்களது கோரிக்கையை தட்டாமல் சென்னையிலும் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளுமாறு ஷங்கருக்கு உத்தரவிட உடனே ஓ.கே. சொன்னார் ஷங்கர். இப்போது ஏவி.எம் ஸ்டுடியோவில் செட் போட்டு சென்னையிலும் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது.

  By Staff
  |

  சிவாஜி படத்தில் ரஜினியின் வில்லனாக நடிக்க, அவருடன் தீ படத்தில் தம்பியாக நடித்த சுமன், பேசி முடிச்சாச்சாம்.

  ஷங்கர் இயக்கம், ஏவி.எம். தயாரிப்பு என சிவாஜி பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

  ஹைதராபாத்திலேயே பெரும்பாலான காட்சிகளை சுட்டெடுத்த நிலையில் சென்னையிலும் படப்பிடிப்பு வையுங்கள், எங்களுக்கு வேலை கொடுங்கள் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ரஜினிக்கு நேரடியாக கோரிக்கை வைத்தது.

  ஆகா.. இது ஒரு பிரச்சனை ஆகிவிடுமோ என்று யோசித்த ரஜினி, அவர்களது கோரிக்கையை தட்டாமல் சென்னையிலும் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளுமாறு ஷங்கருக்கு உத்தரவிட உடனே ஓ.கே. சொன்னார் ஷங்கர். இப்போது ஏவி.எம் ஸ்டுடியோவில் செட் போட்டு சென்னையிலும் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது.

  ரஜினியின் ஒரு ஜோடியான ஷ்ரேயா ஒரு டூயட்டையே முடித்து விட்டார். ஆனால், இன்னொரு ஹீரோயின் தான் இன்னும் முடிவாகாமல் இழுத்துக் கொண்டே போகிறது.


  ஐஸ்வர்யாவில் ஆரம்பித்து ராணி முகர்ஜி வரை பேசிவிட்டு காத்திருக்கிறார்கள்.

  படததில் அம்மா கட்சி விஜயக்குமார், விவேக், எம்.எஸ்.பாஸ்கர், மணிவண்ணன் உள்ளிட்டோரும் உண்டு.

  ஏவி.எம். ஸ்டுடியோ வளாகத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சியையும் சுட்டுத் தள்ளியுள்ளார்கள். அந்நியனில் கலக்கிய பீட்டர் ஹெய்னின் அதிக வேக மூவ்மென்ட்டுகளை ரஜினி அட்டகாசமாக உள்வாங்கி அனாயசமாக ஃபைட் செய்து கலக்கியுள்ளாராம்.

  இதில் காமெடி கலந்த அதிரடி அடி, உதை பாத்திரத்தில் வருகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன். இவரது சிஷ்யர்தான் பீட்டர் ஹெய்ன் தெரியுமோ.


  சண்டைக் காட்சியை படமாக்கியபோது, குருவுக்கே தயங்காமல் மூவ்மெண்ட்ஸ் சொல்லிக் கொடுத்து அவரிடம் பாராட்டு வாங்கினாராம் ஹெய்ன்.

  இப்போது ரஜினியின் வில்லன் முடிவாகி விட்டார். முதலில் அமிதாப்பச்சன், மோகன்லால், சத்யராஜ், மம்மூட்டி, ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் என பலரையும் அணுகி, எல்லோரும் மறுத்து விடவே டென்ஷன் ஆகிவிட்டார் ரஜினி. கூடவே ஷங்கரும்.

  என்னடா இது வில்லனுக்கு வந்த சோதனை என்று புலம்பிய ஷங்கர் இப்போது புத்தம் புது வில்லனை கண்டுபிடித்து விட்டார். அவர்தான் சுமன்.

  நீச்சல் குளம் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த சுமன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு தீ படத்தில் (இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த தீவார் படத்தின் தமிழ்ப் பதிப்பு),

  ஸ்ரீபிரியாவுக்கு ஜோடியாக, ரஜினியின் தம்பியாக நடித்தார்.


  தமிழில் பிசியாக இருந்த காலத்தில் கல்லூரி மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்ததாக வழக்கில் சிக்கி நாறினார். பின்னர் அந்த வழக்கிலிருந்து இவரும், இவரது தாயாரும் விடுதலை ஆனார்கள். அதைத் தொடர்ந்து நடிகை சுஹாசினியுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

  அப்புறம் தமிழ் கைவிடவே தெலுங்குக்குப் போய்விட்டார் இந்த மலையாளத்துச் சேட்டன். அங்கு அதிரடி வேடங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

  இப்போது தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்பு குறைந்துவிட்டதால் தெலுங்கு டிவி சீரியல்களில் பிசியாக உள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கா பிரச்சாரமும் செய்தார்.

  சுஜி பாலா நடிக்கும் வஞ்சகன் என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளார் சுமன். இதில் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார்.


  இந் நிலையில் சிவாஜியில் வில்லனாக நடிக்க ரெடியாக என்று சுமனை ஷங்கர் அணுகியபோது, உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம். ரஜினியுடன் மீண்டும் நடிக்கப் போகும் ஆர்வமே இந்த உடனடி ஒப்பதலுக்குக் காரணமாம்.

  தமிழ், தெலுங்கு, கன்னடம் என 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள சுமன், சமீபத்தில் தெலுங்கில் நாகார்ஜுனா நடித்து வெளியான அன்னமய்யா படத்தில் திருப்பதி வெங்கடாசபதியாகவும், ஸ்ரீராமதாஸு என்ற படத்தில் ராமன் வேடத்திலும் நடித்தார்.

  இது போதாதா தெலுங்கு ரசிகர்களுக்கு. சாமி வேடம் போட்டதில் இருந்து இவர் மீது தெலுங்கு ரசிகர்களுக்கு ஏகப் பிரியம் காட்டுகிறார்களாம்.

  ராமர் வேசம் போட்ட என்.டி.ஆர். ஆட்சியையே பிடித்தரே அந்த ஊரில்.


  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X