Don't Miss!
- Sports KKR vs RR : தோனியை அப்படியே பின்பற்றினேன்.. என் ஆட்டத்திற்கு காரணம் அவர் தான்.. பட்லர் நெகிழ்ச்சி!
- News ராமநாதபுரத்தில் சிக்கல்.. மதுரை எய்ம்ஸ் மாணவர்களை வேறு மாநிலத்துக்கு மாற்ற திட்டமா? இயக்குனர் விளக்கம்
- Technology அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Lifestyle Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
செம தில்லு மா.. பிட்புல்லுடன் ஆக்ஷன் காட்சி.. அசராமல் நடித்த சுனைனா.. பாராட்டும் ரசிகாஸ்!
செம தில்லு மா.. பிட்புல்லுடன் ஆக்ஷன் காட்சி.. அசராமல் நடித்த சுனைனா.. பாராட்டும் ரசிகாஸ்!
சென்னை: ட்ரிப் படத்திற்காக உலகிலேயே ஆக்ரோஷமான பிட்புல் நாயுடன் இணைந்து நடிகை சுனைனா நடித்துள்ள ஆக்ஷன் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
சாம் ஆண்டனின் உதவியாளரான டென்னிஸ் இயக்கத்தில் சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த இந்த படமும் கொரோனா பாதிப்பால் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ.. புதிய சாதனை படைத்த ரஜினிகாந்தின் இன் டு தி வைல்டு நிகழ்ச்சி!
நல்ல நடிகை
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சுனைனாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் பலரது பாராட்டுக்களை அள்ளியது.
சுனைனாவின் ட்ரிப்
சாம் ஆண்டனின் உதவி இயக்குநரான டென்னிஸ் ட்ரிப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். சில்லுக்கருப்பட்டி படத்திற்கு பிறகு சுனைனாவுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வரிசைக் கட்டி வருகிறது. யோகி பாபு, கருணாகரன் உடன் இணைந்து இந்த ட்ரிப் படத்தில் நடித்துள்ளார்.
|
பிட் புல்லுடன்
உலகளவில் வெறிப்பிடித்த நாயாக கருதப்படும் பிட்புல் நாயுடன் ட்ரிப் படத்திற்காக சுனைனா போட்டுள்ள ஸ்டன்ட் காட்சியின் அதிரவைக்கும் மேக்கிங் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சுனைனா தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். சுனைனாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் செம தில்லுமா உனக்கு என பாராட்டி வருகின்றனர்.
|
பிட்புல் பெயர்
ட்ரிப் படத்தின் த்ரில்லான ஸ்டன்ட் காட்சியின் மேக்கிங் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை சுனைனா, அந்த பிட்புல்லின் பெயர் ராம்போ என்றும் கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார். கேட்ச் என சொன்னதும் சுனைனா மீது விழுந்து புராண்டும் பிட்புல்லின் காட்சியை பார்த்து சுனைனா ரசிகர்கள் பதறி போயுள்ளனர்.
|
ஓ மை காட்
சுனைனாவின் இந்த ரிஸ்க்கான ஸ்டன்ட் காட்சியை பார்த்த ரசிகர்கள், அவரின் டெடிகேஷன் லெவலை பாராட்டி வருகின்றனர். மேலும், பிட்புல் கூட நடிக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா இருங்க மேடம், அது ரொம்ப ரிஸ்க், ஓ மை காட் டேக் கேர் என பலரும் கமெண்ட் செக்ஷனில் அந்த காட்சியை பார்த்து அதிர்ந்து போய் பதிவிட்டு வருகின்றனர்.