»   »  கிட்ட வாடா கெட்ட படவா!

கிட்ட வாடா கெட்ட படவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுனிதா வர்மா, கீர்த்தி சாவ்லா, அம்சவர்த்தன் நடிக்கும் பிறகு படத்திற்காக சமீபத்தில் கவர்ச்சி ரசம் பொங்கப்பொங்க 3 முத்தான பாடல்களை மலேசியா, தாய்லாந்தில் சுடச் சுடச் சுட்டுள்ளனர்.

முன்னாள் ஸ்டைல் மன்னன் ரவிச்சந்திரனின் மகன் அம்சவர்த்தன் கதாநாயகானாக நடிக்கும் இந்தப் படத்தில்அவருக்கு இரண்டு ஹீரோயின்கள். கிளுகிளுக்க வைக்கும் கீர்த்தி சாவ்லா, சுறுசுறு சுனிதா வர்மாவும்அம்சவர்த்தனுடன் அமர்க்களமாக ஜோடி போட்டுள்ளனர்.

படம் முழுக்க சுனிதாவின் கிளாமர் கொடி கட்டிப் பறக்கிறதாம். நான் மட்டும் இனா வானாவா என்று கேட்டு,வேண்டி விரும்பி சுனிதாவை விட சற்று தூக்கலாக கிளாமரை வாங்கி வாசித்து அசத்தியுள்ளாராம் கீர்த்தி.

இருவரோடும் தனித் தனியாக ஆடிப் பாடும் மூன்று பாடல் காட்சிகளை சமீபத்தில் மலேசியாவுக்கும்,தாய்லாந்துக்கும் போய் சூடாக படம் பிடித்துள்ளனர். அதில் வரும் ஒரு பாடலின் முதல் வரி படு அமர்க்களமாகஇருக்கிறது.

கிட்ட வாடா கெட்ட படவா என்பதுதான் அந்த வரி. இப்பாடலுக்கு சுனிதா வர்மா கெட்ட ஆட்டம் போட்டு,அம்சனை பெண்டெடுத்துள்ளாராம். ஏற்கனவே சத்யராஜுடன் 6.2 படத்தில் சுனிதா நடித்தார். அதிலும்கிளாமரில் பொங்கித்தான் பார்த்தார். ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் நடித்த இருவர் படம்இப்போது தான் தயாராகியுள்ளது. இதிலும் ஏகத்துக்கும் கிளாமர் கொடி நாட்டியிருக்கிறார் சுனிதா.

இந் நிலையில் பிறகு படம் மூலம் கோலிவுட்டில் பின்னிப் பெடலெடுத்து விட முடிவு செய்து கிளாமரை அள்ளிஇறைத்து அசத்தியுள்ளாராம்.

கீர்த்தி சாவ்லாவுக்கும் அவரோட திறமையை கொட்டுவதற்கு வாகாக உன்னைப் போல பெண்ணை நான் உலகில்கண்டதில்லை என்ற பாடலை வைத்திருக்கிறார்கள். அவரும் தன் பங்குக்கு தத்திங்கிணத்தோம் போட்டுரசிகர்களைப் படுத்தப் போகிறாராம்.

இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், லகலக ரகஸ்யாவின் ரம்யமான குத்தாட்டம் படத்தில்அம்சமாக இடம்பெறுகிறது. இப்பாட்டுக்காக ரகஸ்யாவுக்கு சில சிறப்பு அசைவுகளை வைத்துள்ளார்களாம்.அந்த அசைவுகள், ரசிகர்களை ஆட்டிப் படைப்பது திண்ணம் என்று ரகஸ்யா தட்டி தட்டிச் சொல்கிறார்.

பிறகென்ன, ஸ்பெஷல் ட்ரீட் ரெடியாகிறது, ருசிக்க ரெடியாவோம்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil