»   »  சுனிதா, ஷிகாவின் "ஸ்டில் வார்"!

சுனிதா, ஷிகாவின் "ஸ்டில் வார்"!

Subscribe to Oneindia Tamil

சத்யராஜின் 6.2 படத்தின் நாயகி சுனிதா வர்மாவும், இரண்டாவது நாயகி சுஹாவும் கவர்ச்சியில் மூன்றாம் உலகப் போரே நடத்தி,படத்துக்கு பெரும் பலம் சேர்த்துள்ளார்களாம்.

சத்யராஜின் உயரத்தையே தலைப்பாக வைத்து உருவாகி வரும் படம் 6.2. பிரெஞ்சு தாடி வைத்து முற்றிலும் மாறுபட்ட விக்குடன்,படு கலக்கலாக வரும் சத்யராஜுக்கு ஜோடியாக சுனிதா வர்மா (ஜனப்பிரியா என்ற பெயரில் முன்பு நடித்தவர்) என்றதக்காளியைப் போட்டுள்ளார்கள்.

சுனிதா போதாதென்று ஷிகா (சீயக்கா இல்லீங்க.. ஷிகா) என்ற "கும்"மையும் களத்தில் இறக்கி விட்டுள்ளார்கள்.

கேரளத்தைச் சேர்ந்த சுனிதா வர்மா தனது உடல் பலத்தை காட்டுவதில் புகுந்து விளையாடியுள்ளார். இயக்குனர் கேட்பதற்குமுன்பே திறந்த மனதுடன் ஸ்பாட்டில் நிற்கிறாராம் சுனிதா. அவரது ஒத்துழைப்பு படு பிரமாதம் என்பதால், அவரது தாராளகவர்ச்சி ஸ்டில்களை வரிசையாக வெளியிட்டு படத்துக்கு இப்பவே பூஸ்ட் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சுனிதாவின் இந்த ஸ்டிகளைப் பார்த்து, அர்த்தம் புரிந்து கொண்ட தயாரிப்புப் பார்ட்டிகள் சுனிதாவுக்கு அட்வான்ஸ் தர போட்டிபோட ஆரம்பித்துவிட்டன. இதனால் அவரது கையில் ஏகத்துக்கும் ஆபர்கள்.

இதில் சுனிதாவுக்குப் போட்டியாக புகுந்து விளையாடி வரும் ஷிகாவும் சும்மா இல்லையாம். சுனிதா என்ன, கேரளா தானே.. நான்மும்பையாக்கும் என்று கூறிக் கொண்டு 2 பீஸ், சிங்கிள் பீஸ் மட்டும் கேட்டு வாங்கி போடுகிறாராம்.


இவர்களுக்கு அப்பா வயதான சத்யராஜ், இந்த இருவரையும் தூக்கி, கொஞ்சி உட்டாலங்கடி ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். கொடுத்து வச்ச மவராசன்.

புதுமுகம் என்பதால், ஷிகாவைப் பிழிந்து எடுத்து பல வகையான கவர்ச்சி ரசத்தை வெளிக் கொணர்ந்து வருகிறார்களாம்.எப்படிப் பிழிந்தாலும், எனக்குக் கவலையில்லை, நல்லா பிழிங்கோ என்று ஷிகாவும் கண்டுக்காமல் கலக்கி வருகிறாராம்.

முதலில் சுனிதாவின் கவர்ச்சி ஸ்டில்களை வெளியிட்டு அசத்திய 6.2 பட யூனிட், அடுத்து ஷிகாவின் சூப்பல் ஸ்டில்களை இறக்கிவிட உள்ளதாம். இந்த ஸ்டில் வார் மூலம் படத்துக்கு பெரும் பப்ளிசிட்டி கிடைப்பதோடு, இந்த குட்டிகளுக்கும் அடுத்த சான்ஸ்கிடைத்து வருகிறது. ஒரே கல்லில் பல மாங்காய்.


இந்தப் படம் கிரைம் பேக்கிரவுண்டில் உருவாகிறதாம். படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ, சுனிதா, ஷிகாவின் விருந்துநிச்சயம்.

இதுவரை சத்யராஜ் எந்தப் படத்திற்காகவும் வெளிநாடு சென்றதே கிடையாதாம். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.. அது தான்உண்மை. ஆனால், 6.2 படத்திற்காக முதன்முதலாக லண்டனுக்குக் கூட்டிச் செல்கிறார்கள்.

சுனிதா, ஷிகாவோடு லண்டன் தேம்ஸ் கரையோரத்தில் சத்யராஜ் ஆடப் போகிறாராம். ஆடு ராசா.. ஆடு..


Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil