பதறாதீக... சன்னி லியோனுக்கு விலாப் பகுதியில் காயமாம்!
இந்திய சினிமா ரசிகர்களை சூடேற்றுவதற்காகவே கனடாவிலிருந்து கம்மி உடையோடு பாலிவுட்டில் குதித்திருக்கும் பிரபல 'போர்ன் ஸ்டார்' சன்னி லியோனுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டுள்ளதால், ஓய்விலிருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜிஸ்ம் 3 மூலம் இந்தியில் அறிமுகமானார் சன்னி லியோன். அதற்கு முன்பு வரை அவர் நூற்றுக்கும் அதிகமான பச்சையான ஆங்கிலப் படங்களில் நடித்திருந்தார் (ஆமா... இந்த படங்களுக்கு மொழி ரொம்ப்ப முக்கியம் பாருங்க..)

செக்ஸ் நடிகை
இவை இன்னமும் கூட ஆயிரக்கணக்கான இணையதளங்களில் கிடைக்கின்றன. பணம் செலுத்தித்தான் பார்க்க முடியும். இவற்றில் சில இணையதளங்கள் சன்னி லியோனுக்கு சொந்தமானவை. இவற்றின் மூலம் டாலர்களில் கொட்டுகிறது அவருக்கு பணம்.

வருமானம் கொட்டுகிறது
இந்திய சினிமாவில் நடிக்க வந்த பிறகும் அவர் இந்த பலான தளங்களை மூடவில்லை. மாறாக முன்பை விட அதிகம் பார்க்கும் தளங்களாக இவை மாறியுள்ளன. பணம் இன்னும் அதிகமாகவே கிடைக்கிறதாம்.

அடுத்தடுத்து படங்கள்
இதற்கிடையில் இந்திப் பட வாய்ப்புகளும் குவிந்துவண்ணம் உள்ளன. கோடிகளில் சம்பளம் பெறும் நாயகிகளில் ஒருவராக அவர் திகழ்கிறார்.
இப்போது 3 படங்களில் நடித்துவரும் சன்னி லியோன், மேலும் 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜாக்பாட்
இவர் நடித்த ஜாக்பாட் என்ற படம் டிசமபர் மாதம் வெளியாகிறது. இந்த படத்தில் தமிழ் நடிகர் பரத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ஏக்தா கபூரின் திகில்படமான ராகிணி எம்எம்எஸ்2 அடுத்த ஆண்டு ஜனவரியிலும், டினா அண்டு லுலு படம் ஏப்ரல் மாதமும் வெளியாகிறது.

காயம்
இந்த நிலையில் டினா அண்டு லுலு படப்பிடிப்பின் போது சன்னிலியோனுக்கு படுகாயம் ஏற்பட்டது.
டினா அண்டு லுலு படம் முழு நீள ஆக்ஷன் படம் இந்த படத்தில் ஒரு கார் சண்டையின் போது சன்னி லியோனும் கரீஷ்மா தன்னாவும் நடித்தனர் அப்போது எதிர்பாரத விதமாக சன்னி லியோனுக்கு விலாபகுதியில் காயம் ஏற்பட்டது.

ஓய்வு
உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் தொடர்ந்து சில நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











