Vettaiyan: வேட்டையன் கெட்டப்பில் ரஜினிகாந்த் மாஸ்.. கூடவே யாரு இருக்கா பாருங்க.. லீக்காகிடுச்சே!

சென்னை: நாகர்கோயிலில் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்ததும் படப்பிடிப்பை நிறுத்திய ரஜினிகாந்த் சென்னை திரும்பிய நிலையில், விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும், தான் சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கே கூடிய கூட்டத்தை தனி ஒருவனாக அடித்து விரட்டியவர் விஜயகாந்த். கேப்டன் என்ற சொல்லுக்கு சரியாக பொருந்தக் கூடியவர் என புகழாரம் சூட்டியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் வேட்டையின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரகசியமாக செல்போன் மூலமாக ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Super star Rajinikanth Vettaiyan movie scenes leaked

73 வயதிலும் சூப்பர் ஸ்டார்: நடிகர் ரஜினிகாந்த் இந்த வயதிலும் சோலோ ஹீரோவாக சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டி நடித்து வருகிறார். தலைவர் 170 படத்துக்கு வேட்டையன் என டைட்டில் வைக்கப்பட்ட நிலையில் படம் வெறித்தனமாக உருவாகி வருகிறது. தர்பார், ஜெயிலில் தொடர்ந்து மீண்டும் இந்தப் படத்திலும் போலீஸ் அதிகாரியாகவே நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். வேட்டையன், லால் சலாம், தலைவர் 171 என வரிசையாக பல படங்கள் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ளன.

நட்சத்திரப் பட்டாளம்: ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு என நட்சத்திர பட்டாளம் நடித்த நிலையில் அதேபோல வேட்டையன் படத்திலும் அமிதாபச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயின் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Super star Rajinikanth Vettaiyan movie scenes leaked

ரஜினி மற்றும் பகத் ஃபாசில்: விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் பகத் ஃபாசில் பக்காவான அமர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நிலையில், இந்த ஆண்டு வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் படத்தின் ரத்தினவேலு கதாபாத்திரத்தில் நடித்து தெறிக்க விட்டார். உடனடியாக வேட்டையன் படத்தில் பகத் ஃபாசிலுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், நாகர்கோயிலில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பகத் ஃபாசில் பங்கேற்றுள்ள காட்சிகள் தான் தற்போது லீக் ஆகியுள்ளன. கலர் சட்டை மற்றும் பேண்ட் அணிந்து கொண்டு ரஜினி அருகே பகத் ஃபாசில் நின்று கொண்டிருக்கிறார்.

Super star Rajinikanth Vettaiyan movie scenes leaked

பொங்கல் ரிலீஸ் கிடையாது: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் தனுஷ் படமான கேப்டன் மில்லர் படத்துடன் பொங்கலுக்கு மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் ரேஸில் இருந்து ரஜினி கேமியோவாக நடித்துள்ள லால் சலாம் பின் வாங்கி உள்ளது. பிப்ரவரி மாதம் தான் வெளியாகும் என்று கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X