Just In
- 8 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 8 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 10 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 10 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தகராறு..கனல் கண்ணனை தாக்க முயன்ற மக்கள்!

விஜய் நடிக்கும் 'சுறா' படப்பிடிப்பின்போது பொதுமக்களுக்கும், சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தூத்துக்குடி கடல் பகுதியில் நடந்த படப்பிடிப்பு தளத்துக்குள் நுழைந்த பொதுமக்கள் கனல் கண்ணனை தாக்க முயன்றனர்.
விஜய் நடிக்கும் சுறா படப்பிடிப்பு தூத்துக்குடி கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது. நேற்று தெர்மல்நகர் கடற்கரைப் பகுதியில் கடலில் விழுந்த மீனவர் ஒருவரை கடலோர காவல் படையினர் காப்பாற்றுவது போன்றும், அதனை மாவட்ட ஆட்சியர் வந்து பார்வையிடுவது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்தப் படப்பிடிப்பை பார்க்க ஏராளமானோர் திரண்டனர். அப்போது பொதுமக்களை விலகிச் செல்லுமாறு சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் வலியுறுத்தியுள்ளார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம். இதைப் பார்த்த கனல் கண்ணன் அந்த நபரிடம் இருந்த செல்போனையும் பறித்து வீசினாராம்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கனல் கண்ணனைச் சுற்றி வளைத்து தாக்க முயன்றனராம். இதையடுத்து படப்பிடிப்புக் குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களைச் சமாதானம் செய்துள்ளனர்.
இச்சம்பவத்தால் சிறிது நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்தது.