லிங்குசாமி - சூர்யா படத்தின் ஷூட்டிங் தொடக்கம்... கவுதம் மேனனுக்கும் கிரீன் சிக்னல்!

By Shankar

சென்னை: உள்ளூரிலிருந்து உலகத் தமிழர்கள் வரை ரஜினி - கமலுக்குப் பிறகு ஒரு சாய்ஸ் சொல்லுங்க என்றால் பத்தில் ஐந்து பேரின் ஒரே சாய்ஸ் சூர்யாவாக இருப்பதாக சமீபத்தில் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ரசிகர்களின் டார்லிங்-ஆகிவிட்ட சூர்யா, அந்தப் பெயரைத் தக்க வைக்க அநியாயத்துக்கு சிரத்தை எடுக்கிறார்.

சிங்கம் 2 அதிரிபுதிரி வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அடுத்த படத்தை மிகச் சிறப்பாகக் கொண்டு வரவேண்டுமென்பதில் அக்கறை காட்டுகிறார்.

அதனால்தான் எவ்வளவு வேகமாக அறிவிக்கப்பட்டதோ, அதே வேகத்தில் லிங்குசாமி, கவுதம் மேனன் படங்களை வெயிட்டிங்கில் வைத்துவிட்டார்.

லிங்குசாமி படம் முதலில்

லிங்குசாமி படம் முதலில்

திரைக்கதை, உடன் நடிக்கும் நடிகர்கள், கலைஞர்கள் என பலவற்றிலும் தெளிவான ஒரு முடிவுக்கு வந்த பின் இப்போது லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு முன்னுரிமை தந்துள்ளார்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி சமந்தா. படத்துக்கு ரவுடி என்ற பெயரைப் பரிசீலிக்கிறார்கள். ஆனால் இன்னும் பெட்டராக, குடும்ப ரசிகர்கள் ஏற்கும்படியான பெயரைப் பிடியுங்கள் என்று கூறியுள்ளாராம்.

கவுதம் மேனன்

கவுதம் மேனன்

கவுதம் மேனனின் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படம் ட்ராப் ஆகிவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் படத்தை தொடங்கலாம் என க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம் சூர்யா.

த்ரிஷா

த்ரிஷா

இந்தப் படத்தில் நாயகியாக த்ரிஷா நடிப்பார் எனக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் த்ரிஷாவால்தான் சூர்யா - கவுதம் மேனன் முரண்பட்டு நின்றனர். இப்போது சூர்யா கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறாராம்.

இரண்டு படங்களிலும்

இரண்டு படங்களிலும்

இந்த இரு படங்களிலும் ஒரே நேரத்தில் மாற்றி மாற்றி நடிப்பது என்ற தன் முந்தைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லையாம் சூர்யா. இரண்டு படங்களுக்குமே சரிபாதி கால்ஷீட். இந்த பாணி வெற்றி பெற்றால், இனி ஆண்டு இரு படங்கள், இதே ஸ்டைலில் செய்ய முடிவு செய்துள்ளாராம் சூர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X