ஒரு மழைக்காலத்தில் சூர்யா..

By Staff

மாபெரும் ஹிட் படமான காக்க.. காக்க..வைக் கொடுத்த சூர்யா- இயக்குனர் கெளதம் இணையும் அடுத்த படமானசென்னையில் ஒரு மழைக் காலம் சூட்டிங் தொடங்கியிருக்கிறது.

முதல் கட்டமாக சூர்யா- ஹீரோயின் ஆசின் ஆகியோரின் போட்டோ செஷனை நடத்தி முடித்த கெளதம், சூட்டிங்கில்தீவிரமாகிவிட்டார். காக்க.. காக்க..வில் சூர்யாவை மிடுக்கான இளம் போலீஸ் அதிகாரியாகவே மாற்றிய கெளதம், இதில்அவரை கல்லூரி மாணவராக்கியிருக்கிறார்.

ஆரம்பத்தில் கல்லூரி மாணவராக ஹீரோயின்களுடன் ஆடிப் பாடிக் கொண்டிருந்த சூர்யா, இயக்குனர் பாலாவின் நந்தாமூலமாக புது அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து சூர்யா படங்கள் செலக்ஷனில் மகா ஜாக்கிரதை காட்டி வருகிறார்.

படிப்பை முடித்துவிட்டு கார்மெண்ட்ஸ் ஏற்றுமதியில் ஈடுபடும் யோசனையில், ஜவுளி நிறுவனத்தில் ஜாலியாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சரவணனை சூர்யாவாக மாற்றி சினிமாவுக்குக் கொண்டு வந்த இயக்குனர் வஸந்த் டைரக்ஷனில் ஒரு படம் பண்ணஒப்புக் கொண்டிருந்த சூர்யா, இப்போது அதிலிருந்து விலகிக் கொண்டுவிட்டார்.

கதையில் ஆழம் இல்லை என்பதாலும் டேட்ஸ் இல்லை என்பதாலும் சூர்யா விலகியதாக சொல்கிறார்கள். முட்டல் மோதல்இல்லாமல் வஸந்த்தின் மனம் புண்படாமல், வெளிப்படையாகப் பேசி சூர்யா விலகினாராம். எதிர்காலத்தில் நல்ல கதையோடுமீண்டும் நிச்சயம் சேரலாம் என்றும் சொல்லியிருக்கிறாராம்.

பிதாமகன், ஆய்த எழுத்து, பேரழகன் ஆகிய படங்களில் தனது அடுத்த பரிணாமங்களைக் காட்டி சூர்யாவுக்கு சென்னையில்ஒரு மழைக்காலம் மிக சேலஞ்சிங்கான ரோலாக இருக்கும் என்கிறார் இயக்குனர் கெளதம். வழக்கமான காலேஜ் பசங்களாகவரும் ஹீரோக்களைப் போல சூர்யாவைக் காட்ட கெளதமும், அப்படி நடிக்க சூர்யாவும் தயாராக இல்லை.

இருவரும் சேர்ந்து, பாடி லேங்க்வேஜில் ஆரம்பித்து, ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள்.உடம்பைக் கொஞ்சம் குறைத்து ட்ரிம் ஆகச் சொல்லி கெளதம் உத்தரவிட்டதால், நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. ஜிம்மில் கடந்தஇரு மாதங்களாக மணிக்கணக்கில் உழைத்துள்ளார் சூர்யா.

உடம் வாகு ஓ.கே. என்ற திருப்தி இருவருக்கும் வந்த பிறகு, கடந்த வாரத்தில் போட்டோ செஷனை நடத்தியிருக்கிறார்கள்.ஹீரோயின் ஆசினும் சூர்யாவும் போஸ் கொடுக்க கெளதமின் பேவரிட் சினிமாட்டோகிராபரான ஆர்.டி.ராஜசேகர் இந்த செஷனைநடத்தி படங்களை சுட்டுத் தள்ளியிருக்கிறார். ஜோடிப் பொருத்தம் தூளாக இருப்பதாக சொல்கிறார்கள் (ஜோ.. ஜாக்கிரதை!).

அதே சூட்டோடு சூட்டிங்கும் ஆரம்பமாகிவிட்டது. படத்தில், மாப்பிள்ளை நிச்சயமாகி, திருமணத்துக்கு 10 நாட்களே இருக்கும்நிலையில் ஆசினிடம் தடாலடியாக நேரில் வந்து லவ் சொல்லும் முரட்டுக் காதலன் ரோல் சூர்யாவுக்கு.

அந்த 10 நாட்களில் இருவரும் சந்திக்கும் எமோஷனல் அப்ஸ் அன்ட் டென்ஸ்ஸை கதையாக்கப் போகிறார் கெளதம். மனிதஉணர்வுகளை படமாகப் பிடிப்பதில் அசத்தல் ஆசாமியான கெளதமுக்கு இது அல்வா சாப்பிடுவது மாதிரி.

காக்க.. காக்க..வை தெலுங்கில் வெங்கடேசை வைத்து எடுத்து முடித்துவிட்டு, துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டுவந்திருக்கும் கெளதமுக்கும் இந்த படம் ஒரு சேஞ்சாகத் தான் இருக்கப் போகிறது.

ஆய்த எழுத்துக்குப் பின் ஜிம்முக்குப் போவது தவிர ஏகப்பட்ட மொழிகளில் ரொமான்ஸ் படங்களைப் பார்த்து முடித்திருக்கிறார்சூர்யா. அவரிடம் ஆசின் தப்பி விடுவாரா என்ன?

கொசுறு: இந்தப் படத்தை முடித்த பின் இயக்குனர் பாலா தயாரிக்க, இயக்குனர் செல்வராகவன் டைரக்ட் செய்யப் போகும் ஒருபடத்திலும், இயக்குனர் சேரன் தயாரிக்க, இயக்குனர் ஹரி டைரக்ட் செய்யும் ஒரு படத்திலும் நடிக்கப் போகிறார் சூர்யா.

டைரக்டர்களின் ஹீரோ என்பார்களே.. அது இது தானா?

அதைத் தொடர்ந்து பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்சூர்யா. படத்தின் பெயர் லட்சுமி காந்தன்.

இன்னொரு கொசுறு:

காக்க.. காக்க..வுக்குப் பிறகு சின்ன மனஸ்தாபத்தால் பிரிந்து போன கெளதமும் காமிராமேன் ஆர்.டி. ராஜசேகரும் பேசிராசியாகிவிட்டார்களாம். கெளதம் நினைப்பதை காமிராவின் சுடுவதில் ராஜசேகர் கில்லாடி என்பது உங்களுக்குத் தெரியாதாஎன்ன?

கடைசி கொசுறு: கடந்த வாரம் தனது 29வது பிறந்த நாளை மிக சிம்பிளாக தனது தி.நகர் கிருஷ்ணா சாலை வீட்டில் அப்பாசிவக்குமார், அம்மா, தங்கை, தம்பி கார்த்திக்குடன் கொண்டாடிய சூர்யாவுக்கு வாழ்த்துச் சொல்ல கூடிய ரசிகர் கூட்டம் அந்தஏரியாவையே கலங்கடித்துவிட்டது.

கலைப்புலி தாணுவில் தொடங்கி இயக்குனர்கள் பலரும் சூர்யாவை நேரில் வந்து வாழ்த்திவிட்டுப் போனதை பூரிப்போடுபார்த்துக் கொண்டிருந்தார் சிவக்குமார்.

கட்டக் கடைசி கொசுறு: அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு இப்போது மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகடிரெய்னிங்கில் இருக்கும் சூர்யாவின் தம்பி கார்த்திக், தனது முதல் படத்தை அண்ணனை வைத்து எடுக்கப் போகிறாராம்.

இது வம்பு கொசுறு: தமிழ் நடிகைகளிலேயே பென்ஸ் கார் வைத்திருக்கும் ஒரே நடிகை ஜோதிகா தான். சூட்டிங்குக்கு அந்தக்காரில் ஜோ வந்திறங்கும் அழகே தனியாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X