»   »  சூர்யா பட சூட்டிங்: மாணவர்கள் "சுர் சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிக்கும் படம் "ஜில்லுன்னு ஒரு காதல்.சூர்யாவின் உறவினர் ஒருவர் தான் இதை தயாரிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் கோவை வேளாண் பல்கலைகழகத்தில் நேற்று முன்தினம்தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் தேர்வு நேரத்தில் பல்கலைகழகத்திற்குள் சூட்டிங்நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பல்கலைகழகத்தில் நடந்த சூட்டிங்கில் ஒரு காட்சி

சூர்யா பட சூட்டிங்: மாணவர்கள் "சுர் சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிக்கும் படம் "ஜில்லுன்னு ஒரு காதல்.சூர்யாவின் உறவினர் ஒருவர் தான் இதை தயாரிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் கோவை வேளாண் பல்கலைகழகத்தில் நேற்று முன்தினம்தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் தேர்வு நேரத்தில் பல்கலைகழகத்திற்குள் சூட்டிங்நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பல்கலைகழகத்தில் நடந்த சூட்டிங்கில் ஒரு காட்சி

Subscribe to Oneindia Tamil

சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிக்கும் படம் "ஜில்லுன்னு ஒரு காதல்.

சூர்யாவின் உறவினர் ஒருவர் தான் இதை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் சூட்டிங் கோவை வேளாண் பல்கலைகழகத்தில் நேற்று முன்தினம்தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் தேர்வு நேரத்தில் பல்கலைகழகத்திற்குள் சூட்டிங்நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.


பல்கலைகழகத்தில் நடந்த சூட்டிங்கில் ஒரு காட்சி

சூர்யா, பூமிகா தொடர்பான காட்சிகள் பல்கலைகழக வளாகத்திற்குள் படமாக்கப்பட்டுவருகின்றன.

நூலகம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதால் பல்கலை நூலகத்திற்குள்மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

வழக்கம்போல நூலகத்திற்கு சென்ற மாணவர்களை படப்பிடிப்பு செக்யூரிட்டிகள்உள்ளே விடவில்லை.


வேளாண் பல்கலை மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் தேர்வுகள் துவங்குகிறது.தற்போது இண்டர்னல் தேர்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நேரத்தில் மாணவர்களை நூலகத்திற்கு அனுமதிக்காததால் மாணவர்கள் சூட்டிங்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் சூட்டிங் தொடர்ந்து நடந்துவருகிறது.

இது குறித்து பல்கலை மாணவர்கள் கூறுகையில்,

தேர்வு நேரத்தில் சூட்டிங் நடத்த அனுமதிக்கப்பட்டிருப்பதால் எங்களின் படிப்புபாதிக்கப்படுகிறது.


மூன்று நாட்கள் சூட்டிங் நடத்துவதற்க அனுமதி தரப்பட்டுள்ளது. எங்கள் படிப்பைபற்றி நிர்வாகத்திற்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை என்றனர்.

சூர்யா நல்ல மனிதராச்சே.. தேர்வு குறித்து விஷயம் தெரிந்த பின்னர் இங்கு சூட்டிங்வைப்பதை தவிர்த்திருக்கலாமே


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil