சிவனேன்னு கிடந்த எருமை மாடு.. சீண்டிப் பார்த்த டாப்சி.. பிறகென்ன ஓட்டம்தான்!
சென்னை: சிவனேன்னு படுத்துக் கிடந்த எருமை மாட்டை சீண்டப் போய், அது விரட்டி வந்த கதை தெரியுமா.. டாப்ஸிக்கு சமீபத்தில் அந்த அனுபவம் கிடைத்தது.
நடிகை டாப்ஸிக்கு அழகே அவங்க கொழு கொழு உடலழகும், அவரது ஸ்ப்ரிங் போன்ற முடியும்தான். இரண்டுமே அவரிடம் இப்போது மிஸ்ஸிங். தனுஷுடன் டாப்ஸி ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்து இருப்பார். அந்த கதாபாத்திரத்துக்கு தகுந்தாற் போன்ற அவரது உடல் அழகு, முடி அழகு, உடைகள் என்று இவருக்கு ஆங்கிலேயன் இந்தியன் பெண்ணுக்கு கனக் கச்சிதப் பொருத்தம் அமைந்தது.
இப்போது டாப்ஸி ஒரு விளையாட்டு வீராங்கனையாக நடிக்க தனது உடல் வடிவம், முடி அழகு என்று எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார். இதற்காக நிறைய வொர்கவுட் செய்திருக்கிறார் நடிகை டாப்ஸி.

மும்பை பக்கம்
தமிழில் பட வாய்ப்புக்கள் அவ்வளவாக இல்லை என்று, மும்பை பக்கமே ஒதுங்கினார்.அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. ஹாக்கி வீராங்கனை, கேம் ஓவர் திரில்லர் படம் என்று எல்லாமே சூப்பர் ஹிட் படங்களாக அமைந்து, அங்கு வேறு ஒரு பரிமாணத்தில் ஜொலிக்க ஆரம்பித்து இருக்கார் டாப்ஸி.

தடகள விளையாட்டு
இப்போது படப்பிடிப்பு ஆரம்பித்து படத்தில் டாப்ஸி தடகள விளையாட்டு வீராங்கனையாக நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.இதற்காக தினமும் கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட பயிற்சிகளால் டாப்ஸி நிஜமாகவே விளையாட்டு வீராங்கனை போன்ற ஸ்ட்ராங் உடல் வலிமையை பெற்று. அத்துடன் தோற்றமே மாறியும் இருக்கிறார்.

விளையாட்டு தொடர்பான சீசன்
இப்போதைய டிரண்ட் தமிழிலும் சரி ,இல்லை இந்தி, தெலுங்கு படங்களிலும் சரி விளையாட்டு தொடர்பான படங்களின் சீசன் அல்லது டிரண்ட் என்று சொல்லும்படி இருக்கிறது. இப்படிப்பட்ட படங்களுக்கு வித்திட்டவர் பாலிவுட் நடிகர் அமீர்கான் என்றால் அது மிகை இல்லை. இது வரவேற்கத் தக்க அம்சமாகவும் இருக்கிறது.

வெள்ளாவி வெளுத்தவர்
என்னதான் சொல்லுங்க வெள்ளாவியில் வச்சு வெளுத்த டாப்ஸியின், வெயிலுக்கு காட்டாமல் வளர்த்த ஆடுகளம் டாப்ஸி அழகே தனி.அவரின் உடலழகும் தனி கவர்ச்சி.இனி இப்படியும் டாப்ஸியை பார்க்க முடியுமா என்று ரசிகர்களை ஏங்க வைத்துவிட்டாரே டாப்ஸி.

எருமையுடன் மோதல்
அட.. எருமை மேட்டரை விட்டுட்டோமே... சாந்த் கி ஆங்க் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் டாப்ஸி. அப்போது செட்டில் படுத்துக் கிடந்த ஒரு எருமை மாட்டைப் பார்த்த அவர் அதனுடன் போய் விளையாட ஆசைப்பட்டார். ஆரம்பத்தில் எருமை சும்மாதான் இருந்தது. பின்னர் என்ன நினைத்ததே டக்கென எழுந்து டாப்ஸியை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டது. பிறகென்ன பியூட்டிபுல் பின்னங்கால்.. பிடறியில் பட ஓடித் தப்பினார் டாப்ஸி!


Click it and Unblock the Notifications











