கமலைப் புகழ்ந்து பாடல்-பரமக்குடி 1வது வார்டு படத்தில் வினோதம்

By Sudha

Kamal with Rathi
பரமக்குடி 1வது வார்டு என்ற படத்தில் கமல்ஹாசனைப் புகழ்ந்து ஒரு பாடலைப் போட்டுள்ளனராம்.

சரவணப்பெருமாள் இயக்கும் புதிய படம் பரமக்குடி 1வது வார்டு. இப்படத்தை முழுக்க முழுக்க பரமக்குடியில் வைத்து உருவாக்கி வருகிறார் பெருமாள். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம் இது.

இந்தப் படத்தில் ஒரு பாடலை கமல்ஹாசனுக்காக அர்ப்பணித்துள்ளனராம். அதாவது இந்தப் பாடல் முழுவதும் கமல்ஹாசனைப் புகழ்ந்தும், பரமக்குடியின் வரலாற்றை சித்தரித்தும் வடித்துள்ளனர்.

சேதுபதி மன்னர் ஆண்ட வீரம் விளைந்த பூமி
செத்தும் கொடுத்த சீதக்காதி கிழவனோட நண்பன்டா
காதல் பேசும் கமலு சாரு பிறந்தது எங்க மண்ணுடா
காலம் தந்த நாயகனும் உலகில் அவருதானடா என்று தொடங்குகிறது அந்தப் பாடல்.

இப்பாடலை எழுதியிருப்பவர் கடவுள். கமல்ஹாசன் தன்னை ஒரு நாத்திகவாதி என்று கூறிக் கொள்பவர், அவரைப் பற்றி புகழ்ந்து பாடியிருக்கிறார் கடவுள், என்ன ஒரு விசேஷம்.

இப்படத்தை உருவாக்குவது பரமக்குடியை சேர்ந்த கோவிந்தராஜா மற்றும் முருகன் ஆகியோர். மண்மணம் கமழ, பரமக்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் வைத்து படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X