வலிமை படத்தின் சண்டைக்காட்சி… ஹைதராபாத்தில் சூட்டிங்
சென்னை : அஜீத் நடிப்பில் இயக்குனர் ஹச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் வலிமை. இந்த படத்தின் சண்டை காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கபட்டு வருவதாகவும், அஜீத்திற்கும் வில்லனுக்கு இடையேயான சண்டை காட்சிகளும் இங்கேயே படமாக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தல அஜித் தமிழ் சினிமாவில் அனைவரது மனம் கவர்ந்த நடிகர். இவர் விஸ்வாசம் வரை கமர்சியலான படங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு பின்க் எனும் படத்தை தமிழில் மிக துணிச்சலுடன் ரீமேக் செய்து தயாரிக்கப்பட்ட நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார், வழக்கறிஞராகவும், அஜீத் ஒரு விதமான நோயால் பாதிக்கப்பட்டவராகவும் நடித்து இருப்பார் அது அஜீத்தின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

மேலும் வித்தியாசமான படங்களை தேடி பிடித்து பார்க்கும் ரசிகர்களுக்கு அஜீத் பேசிய டயலாக் மற்றும் அவரின் இந்த வித்தியாசமான முயற்சியை ரசிகர்கள் பெரிதும் பாராட்டினார் இதுபோன்று சமூக அக்கறை உள்ள படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு ஹச்.வினோத் மற்றும் தல அஜீத் இணைந்து பணியாற்றும் படம்தான் வலிமை. இப்படத்தை நேர்கொண்ட பார்வையை தயாரித்த போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் சண்டை காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கபட்டு வருவதாகவும், அஜித்திற்கும் வில்லனுக்கு உண்டான சண்டை காட்சிகளும் இங்கேயே நடந்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் வலிமை படத்தின் ரிஸீஸ் தேதி எப்போது வரும் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











