மலையாளத்தில் ஒரு தமிழ் 'பிட்'!

தமிழ் சினிமாக்களில் அவ்வப்போது மலையாளத்தையும், மலையாளிகளையும் வைத்து கேரக்டர்கள் பிண்ணப்படுவது சாதாரணமானதுதான். அதேபோல மலையாளப் படங்களிலும் தமிழும் தவறாமல் இடம் பெறுவது வழக்கம்.
நிறைய மலையாளப் படங்களில் தமிழில் பாடல்களே இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் முல்லா என்ற ஒரு மலையாளப் படத்தில் தமிழ் சினிமா ஷூட்டிங் ஒன்று இடம் பெறுகிறது.
அதாவது தமிழ் சினிமா ஷூட்டிங் போன்ற ஒரு காட்சியை படத்தில் இணைத்துள்ளனர்.
இந்த ஷூட்டிங் காட்சிக்காக சுஜாவும், அசோக்கும் இணைந்து ஆடிய குத்துப் பாட்டை படமாக்கியுள்ளனர்.
கட்டு கட்டு முண்டாசக் கட்டு, கொளுத்து கொளுத்து பட்டாசக் கொளுத்து என்று ஆரம்பிக்கும் அந்தக் குத்துப் பாட்டை சமீபத்தில் பழனி அருகே வைத்து சுட்டனர்.
பழனி அருகே உள்ள குப்பம் என்ற இடத்தில்தான் இந்த சூடான குத்துப் பாட்டு காட்சி படமானது. அந்த இடத்தில் தமிழ் சினிமா ஷூட்டிங் நடைபெறுவது போலவும், அதை ஏராளமான பேர் திரண்டு நின்று பார்ப்பதாகவும், இந்தக் காட்சி முல்லா படத்தில் வருகிறதாம்.
இப்ப சொல்லுங்க, 'அந்த பிட்'டுக்கும், 'இந்த பிட்'டுக்கும் வித்தியாசம் இருக்குல்ல!


Click it and Unblock the Notifications











