»   »  தேஜாஸ்ரீயும் முத்துக்காளையும் முத்துக்காளை படு குஷியாக துள்ளிக் குதித்து வருகிறார்.வடிவேலு, விவேக்குக்குப் பிறகு அதிக டிமாண்ட் உள்ள காமடி நடிகராகமாறியிருப்பதுதான் இந்த துள்ளாட்டத்துக்குக் காரணம்.ராஜபாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்ட முத்துக் காளை ஆரம்பத்தில், ஸ்டண்ட்நடிகராகத்தான் அறிமுகமானார். கும்பலோடு, கும்பலாக வந்து சண்டை போட்டுச்சென்ற இவர் செட்டில், சில்மிஷம் செய்வதைப் பார்த்த சிலர், பேசாமல் காமடிசெய்யலாமே என்று அட்வைஸ் செய்துள்ளனர்.இதையடுத்து வடிவேலுவிடம் போய் அண்ணே, வழி காட்டுங்க என்று நின்றார்.வாய்யா, வாய்யா, வந்து சேருய்யா என்று தனது ஜோதியில் ஐக்கியமாக்கினார்வைகைப் புயல். அன்று முதல் முத்துக்காளையின் திரையுலக வாழ்க்கை, பெரும் திருப்புமுனையைக்கண்டது, அவரும், வடிவேலுவும் சேர்ந்து பண்ணிய செத்துச் செத்துவிளையாடுவோமா? காமடியில்தான்!

தேஜாஸ்ரீயும் முத்துக்காளையும் முத்துக்காளை படு குஷியாக துள்ளிக் குதித்து வருகிறார்.வடிவேலு, விவேக்குக்குப் பிறகு அதிக டிமாண்ட் உள்ள காமடி நடிகராகமாறியிருப்பதுதான் இந்த துள்ளாட்டத்துக்குக் காரணம்.ராஜபாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்ட முத்துக் காளை ஆரம்பத்தில், ஸ்டண்ட்நடிகராகத்தான் அறிமுகமானார். கும்பலோடு, கும்பலாக வந்து சண்டை போட்டுச்சென்ற இவர் செட்டில், சில்மிஷம் செய்வதைப் பார்த்த சிலர், பேசாமல் காமடிசெய்யலாமே என்று அட்வைஸ் செய்துள்ளனர்.இதையடுத்து வடிவேலுவிடம் போய் அண்ணே, வழி காட்டுங்க என்று நின்றார்.வாய்யா, வாய்யா, வந்து சேருய்யா என்று தனது ஜோதியில் ஐக்கியமாக்கினார்வைகைப் புயல். அன்று முதல் முத்துக்காளையின் திரையுலக வாழ்க்கை, பெரும் திருப்புமுனையைக்கண்டது, அவரும், வடிவேலுவும் சேர்ந்து பண்ணிய செத்துச் செத்துவிளையாடுவோமா? காமடியில்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முத்துக்காளை படு குஷியாக துள்ளிக் குதித்து வருகிறார்.

வடிவேலு, விவேக்குக்குப் பிறகு அதிக டிமாண்ட் உள்ள காமடி நடிகராகமாறியிருப்பதுதான் இந்த துள்ளாட்டத்துக்குக் காரணம்.

ராஜபாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்ட முத்துக் காளை ஆரம்பத்தில், ஸ்டண்ட்நடிகராகத்தான் அறிமுகமானார். கும்பலோடு, கும்பலாக வந்து சண்டை போட்டுச்சென்ற இவர் செட்டில், சில்மிஷம் செய்வதைப் பார்த்த சிலர், பேசாமல் காமடிசெய்யலாமே என்று அட்வைஸ் செய்துள்ளனர்.

இதையடுத்து வடிவேலுவிடம் போய் அண்ணே, வழி காட்டுங்க என்று நின்றார்.வாய்யா, வாய்யா, வந்து சேருய்யா என்று தனது ஜோதியில் ஐக்கியமாக்கினார்வைகைப் புயல்.


அன்று முதல் முத்துக்காளையின் திரையுலக வாழ்க்கை, பெரும் திருப்புமுனையைக்கண்டது, அவரும், வடிவேலுவும் சேர்ந்து பண்ணிய செத்துச் செத்துவிளையாடுவோமா? காமடியில்தான்!.

தமிழ் போதாதென்று தெலுங்கிலும் இப்போது புகுந்து கலக்க ஆரம்பித்துள்ளார்முத்துக்காளை.

கோபிசந்த்-மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடிக்கும் இந்த தெலுங்குப் படத்தில் நடிக்கவந்த வாய்ப்பு குறித்து முத்துக்காளை குஜாலாகிப் பேசுகிறார்.

எனக்கு தெலுங்கே தெரியாதுண்ணே, பேசுறது புரியும் அவ்ளோதான். உதயசங்கர்சார்தான் ஊக்கம் கொடுத்து பேசச் செய்தார். அவர் சொன்னதை அப்படியேக் கேட்டுபேசினேன். கரெக்டா பேசுறியேப்பான்னு எல்லாப் பேரும் பாராட்டஆரம்பிச்சுட்டாங்க. இப்ப கை நிறைய தெலுங்குப் படம் இருக்குண்ணே என்றுபுளகாங்கிதப்படுகிறார்.


கோடம்பாக்கம் படம்தான் தெலுங்குக்கு இவரைக் கொண்டு சென்றதாம்.

தியா, தேஜாஸ்ரீ ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான கோடம்பாக்கத்தில்காமெடியில் கலக்கியுள்ளார் முத்துக்காளை.

இந்தப் படத்தில் கிளுகிளுப்பான காட்சிகள் நிறைய. தேஜாஸ்ரீ, இதில் கிளாமர்கில்லியாக துள்ளி விளையாடியுள்ளார். ஒரு காட்சியில், அவருக்கு சைக்கிள் கற்றுத்தருவார் முத்துக்காளை. அந்தக் காட்சியை எடுக்கும்போது முத்துக்காளை தடுமாறிவிட்டாராம்.

பின்னே, தேஜாஸ்ரீயை இறுக்கி அணைத்து கற்றுத் தர வேண்டும் என்று சொன்னால்வெட்கம் வராதா என்ன?


இருந்தாலும் கேமராமேன் செந்தில்குமார் விடவில்லையாம், எத்தனை டேக் ஆனாலும்பரவாயில்லை, தேஜாஸ்ரீயை நன்றாக இடுப்பில் பிடித்துக் கொண்டுதான் நடிக்கவேண்டும். அவர் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று கூறிவிட்டாராம்.

ஒரு வழியாக,தைரியத்தை வரவழைத்துக் கொண்ட முத்துக்காளை (சமீபத்தில்தான்அண்ணனுக்கு கல்யாணம் ஆச்சு!) அந்தக் காட்சியில் புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டாராம்.

பூந்து விளையாடிய முத்துக்காளையைப் பார்த்து தேஜாஸ்ரீக்குத்தான் ரொம்பவெட்கமாகி விட்டதாம்.

இந்த கிளுகிளுவைப் பார்த்துத் தான் தெலுங்குவாலாக்கள் கூப்பிட்டார்களாம்.

முத்துக்காளை கையில் இப்போது ஜில்லுன்னு ஒரு காதல், வீராசாமி, காக்கி, யாமிருக்கபயமேன், இம்சை அரசன் 23ம் புலிகேசி என 20க்கும் மேற்பட்ட படங்கள்.


Read more about: muthukalai in telugu films

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil