»   »  தேஜாஸ்ரீயின் புது ஆட்டம்!

தேஜாஸ்ரீயின் புது ஆட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அர்ஜூனுடன் சேர்ந்து சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா என்று கேட்டு மிரட்டிய தேஜாஸ்ரீ, தனது "கலைச்சேவை"யை மேலும் விரிவுபடுத்தி காசு பார்க்க ஆரம்பித்துள்ளார்.

ஆந்திரத்துக் கிளியான தேஜாஸ்ரீ, குத்துப் பாட்டின் மூலம் தான் பிரபலம் ஆனார். ஆனாலும் அவரது ஆசையெல்லாம்,ஹீரோயினாக கலக்க வேண்டும் என்பது தான். ஆனால் அவரது ஆசை ரொம்ப லேட்டாகத் தான் நிறைவேறியது.

விவேக்குடன் சொல்லி அடிப்பேன் படத்தில் 2 ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வருகிறார் தேஜாஸ்ரீ. ஆனால் இவரதுகஷ்டக்காலம், இந்தப் படம் இப்போதைக்கு வருவது போலத் தெரியவில்லை என்பதாலும், தொடர்ந்து ஹீரோயின் வேடத்திற்குவாய்ப்பு வராததாலும், மறுபடியும் குத்தாட்டத்திற்குத் நான் தயார் என்று தேஜாஸ்ரீ கூறியுள்ளார்.

இப்படி அவர் கூறி விட்டாலும், வாய்ப்புகள் என்னவோ ரொம்ப கம்மியாகவே வந்ததால், வருமானத்திற்கு வேறு வழிகளைப்பார்க்கத் தொடங்கினார் தேஜாஸ்ரீ. அதில் ஒரு வழியாக இப்போது கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில்காசு வாங்கிக் கொண்டு டான்ஸ் ஆட ஆரம்பித்துள்ளாராம் தேஜாஸ்ரீ.

சமீபத்தில் தூத்துக்குடி அருகே நடந்த கோவில் திருவிழா ஒன்றில் தேஜாஸ்ரீயின் குளிர் நடனத்தைப் பார்க்கும் வாய்ப்பு பக்தபெருமக்களுக்குக் கிடைத்துள்ளது.

கோவில் திருவிழா தான் என்றாலும் "சின்ன வீடா வரட்டுமா" ரக பாட்டுக்களுக்கும், மன்மத ராசா பாட்டுக்கும் குத்தாட்டம்போட்டு பார்க்க வந்த பக்தர்களுக்கு "அருள்" ஏற்றி விட்டு வந்திருக்கிறாராம் தேஜாஸ்ரீ.

தேஜாஸ்ரீயின் முடிவைப் பின்பற்றி மேலும் சில நடிகைகளும் கோவில் திருவிழாக்களில் ஆடும் முடிவுக்கு மாறவுள்ளார்களாம்.


ஏற்கனவே கிரண், சங்கவி, ரகஸ்யா போன்ற நடிகைகள் சென்னையில் உள்ள சில நட்சத்திர ஹோட்டல்களில் ஆடி வருகிறார்கள்.இதில் நல்ல டப்பு வருவதால் தொடர்ந்து ஆடி சம்பாதிக்கிறார்கள்.

இப்போது கோவில் திருவிழாக்களிலும் நடிகைகள் ஆடத் தொடங்கியிருப்பதால், பக்தர்களை அந்த மாரியாத்தா தான் காப்பாற்றவேண்டும்!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil