கீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்.. ’தலைவர் 168’ ஷூட்டிங்கில் நடந்த திடீர் கொண்டாட்டம்!
சென்னை: நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷை பாராட்டி 'தலைவர் 168' படக்குழு சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
'தலைவர் 168' ஷூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷுக்கு 'தலைவர் 168' படக்குழு நடத்திய பாராட்டு விழா புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டு வைரலாக்கி வருகிறது.

தேசிய விருது
66வது தேசிய விருது விழா டெல்லியில் கடந்த டிசம்பர் 23ம் தேதி நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சினிமா கலைஞர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் விருதுகள் வழங்கப்பட்டன. நடிகை சாவித்ரியின் பயோபிக் படமான நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
ரஜினி பாராட்டு
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 168' படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது ரோல் குறித்த பல வதந்திகள் இணையத்தில் உலா வருகின்றன. தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

கேக் ஊட்டிய ரஜினி
கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்ற கொண்டாட்டத்தை பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்த தலைவர் 168 படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் கேக் ஊட்டும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் இயக்குநர் சிவா மற்றும் காமெடி நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நல்லா சாப்பிட சொல்லுங்க
உடல் எடை மெலிந்து மிகவும் ஒல்லியாக காணப்படும் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை நல்லா சாப்பிட சொல்லுங்க, எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை, உடம்பை பார்த்துக்கோங்க, ஹெல்த் தான் முக்கியம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் கிஃப்ட்
என்னடா சன் பிக்சர்ஸ் சார்பில் கிறிஸ்துமஸ்க்கு ஏதும் வரலையேன்னு பார்த்தேன், இந்த புகைப்படத்தை போட்டுட்டாங்க என மகிழ்ச்சி அடைந்துள்ளார் இந்த ரசிகர்.
தங்கச்சிதானே பரவாயில்லை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டி விடும் நிலையில், தங்கச்சிதானே பரவாயில்லை என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தலைவர் 168ல் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. ஆனால், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை இதுகுறித்த எந்த ஒரு தகவலும் லீக் ஆகவில்லை.
தலைவர் செமயா இருக்காருப்பா
சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது எவர்க்ரீன் எனர்ஜியுடன் காட்சி தருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், தலைவர் செமயா இருக்காருப்பா, அதுபோதும், நல்லபடியா பார்த்துக்கோங்க என கமெண்ட் செய்துள்ளனர்.
ஷூட்டிங்கில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
தலைவர் 168 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை மீனா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஜாலியாக கொண்டாடும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











