தலைவர் 168 ஷூட்டிங் இன்று ஆரம்பம்.. எங்க நடக்குது தெரியுமா?

Recommended Video

Darbar Official Trailer Release| Rajini speech| A.R.Murugadoss

சென்னை: தர்பார் படத்தின் டிரைலர் வெளியாகி இந்தியளவில் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான தர்பார் டிரைலர் மொத்தம் 20 மில்லியன் டிஜிட்டல் பார்வைகளை கடந்துள்ளது.

தர்பார் டிரைலரில் ரஜினிகாந்த் பேசும் ஒவ்வொரு வசனங்களும் இளைஞர்களிடையே வைரலாகி வருகிறது.

ஐ அம் எ பேட் காப் வசனம் தர்பார் டிரைலரில் ஹைலைட்டாக இடம்பெற்றுள்ளது.

தர்பார் டிரைலர் கொண்டாட்டத்தில் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டமாக தலைவர் 168 ஷூட்டிங் இன்று தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ்

ரஜினியின் எந்திரன் மற்றும் பேட்ட படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர் 168 படத்திற்கான பூஜை அண்மையில் சன் ஸ்டூடியோவில் போடப்பட்டது. ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோர் தலைவர் 168 பூஜையில் கலந்து கொண்டனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம்

கடந்த டிசம்பர் 11ம் தேதி சன் ஸ்டூடியோவில் தலைவர் 168 பட பூஜை போடப்பட்டது. டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, சர்ப்ரைஸாக தலைவர் 168 படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரஜினி கலந்து கொண்டு கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் ஷேர் செய்ய, ரஜினி ரசிகர்களிடையே அது வைரலானது.

தலைவர் 168

தலைவர் 168

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் தலைவர் 168 படம் உருவாகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். முத்து, அருணாச்சலம் போல, கிராமத்து பின்னணி மற்றும் கமர்ஷியல் என்டர்டெயினராக இந்த படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷூட்டிங் ஆரம்பம்

ஷூட்டிங் ஆரம்பம்

தலைவர் 168 படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தலைவர் 168 படத்திற்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்றைய ஷூட்டிங்கில் ரஜினியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ க்ளிப்கள் இணையத்தில் கசிந்து வைரலானது. இந்நிலையில், அது போன்று இந்த படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகக் கூடாது என இயக்குநர் சிவா தனது படக்குழுவினரிடம் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X