வீல் சேரில் அமர்ந்திருக்கும் விஜய்.. வைரலாகும் புகைப்படம்.. குழப்பத்தில் தளபதி ரசிகர்கள்!

நடிகர் விஜய் வீல் சேரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

By Staff

சென்னை: நடிகர் விஜய் வீல் சேரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படம் தளபதி 63 என ரசிகர்களால் குறிப்பிடப்பட்டு வருகிறது.

விளையாட்டை கதைக்களமாகக் கொண்ட இப்படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்து வருகிறது.

 வைரல் வீடியோ:

வைரல் வீடியோ:

அந்தவகையில் சமீபத்தில் விஜய் கேரவனில் இருந்து பயிற்சியாளர் கெட்டப்பில் இறங்கி வரும் வீடியோ ஒன்று வைரலானது. அதில் படு ஸ்டைலாக விஜய் இறங்கி வருவதாகவும், நிச்சயம் படம் மிகவும் ஸ்டைலிசாக இருக்கும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

வீல் சேரில் விஜய்:

இந்நிலையில், தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், மைதானத்தில் விஜய் வீல் சேரில் அமர்ந்திருக்கிறார். பயிற்சியாளர் உடையில் கழுத்தில் கட்டுடன் அவர் அதில் தோற்றமளிக்கிறார்.

ரசிகர்கள் கணிப்பு:

ரசிகர்கள் கணிப்பு:

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த விஜய் ரசிகர்கள் பதறிப் போய் உள்ளனர். பெரும்பாலும் இந்தக் காட்சி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அப்படியானால் படத்தில் விஜய்யை யாரோ பயங்கரமாகத் தாக்குவது போன்ற காட்சியோ, அல்லது வில்லன்களால் அவர் விபத்தில் சிக்குவது போன்ற காட்சியோ இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவர்களது கணிப்பு.

மைதானம் புகைப்படங்கள்:

இது ஒருபுறம் இருக்க, தளபதி 63 பட மைதானம் பற்றிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் தளபதி 63 படத்திற்காக, பெரிய கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X