twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தளபதி 63: படப்பிடிப்பு துவங்கும் தேதியில் திடீர் மாற்றம்!

    நடிகர் விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 21ம் தேதி முதல் துவங்குகிறது.

    |

    சென்னை : விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தெறியில் போலீஸ், மெர்சலில் டாக்டராக நடித்த விஜய், இப்படத்தில் விளையாட்டு வீரராக நடிக்கிறார்.

    சர்காரில் தேர்தல் அரசியலை பேசிய விஜய், இந்த படத்தில் விளையாட்டு துறையில் உள்ள அரசியலை பற்றி பேசுகிறார்.

    2018ல் கலக்கிய ஹீரோ யாரு!

    மகளிர் கால்பந்து போட்டி

    மகளிர் கால்பந்து போட்டி

    மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து 16 கால்பந்து வீராங்கனைகளும் நடிக்கின்றனர். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.

    தற்காலிகமாக தளபதி 63

    தற்காலிகமாக தளபதி 63

    இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதனால் இப்படத்துக்கு தற்காலிகமாக தளபதி 63 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 18ம் தேதி துவங்குவதாக முதலில் தகவல் வெளியானது.

    ஜனவரி 21ல் படப்பிடிப்பு

    ஜனவரி 21ல் படப்பிடிப்பு

    ஆனால் தற்போது படப்பிடிப்பு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜனவரி 20ம் தேதி படத்துக்கு பூஜை போடப்படுகிறது. இதையடுத்து ஜனவரி 21ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

    விளையாட்டு படங்கள்

    விளையாட்டு படங்கள்

    இறுதி சுற்று படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் விளையாட்டு தொடர்பான படங்கள் அதிகமாக எடுக்கப்படுகின்றன. மகளிர் கிரிக்கெட்டை மையமாக வைத்து சமீபத்தில் வெளிவந்த கனா படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vijay starrer Thalapathy 63, directed by Atlee will start the shooting from January 21st after traditional pooja.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X