தளபதி 64.. சிமோகா சிறையில் விஜய்யுடன் சண்டை போட்ட விஜய் சேதுபதி.. இன்னும் 40 நாளைக்கு அப்டித்தான்!
தளபதி 64 படத்தில் விஜய், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் கர்நாடக மாநிலம் சிமோகாவில் உள்ள சிறைச்சாலையில் படமாக்கப்பட்டு வருகிறது.
சென்னை: தளபதி 64 படக்குழு கர்நாடக சிறையில் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது.
பிகில் படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தளபதி 64 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் சிமோகாவில் தொடங்கியுள்ளது. அங்குள்ள சிறைச்சாலையில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்த மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறார்.
தொடர்ந்து 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக சிமோகா சிறைச்சாலையின் முகப்பு பகுதியில் புதிய வண்ணத்தை பூசியுள்ளது படக்குழு.


Click it and Unblock the Notifications











