»   »  பள்ளிக்கூடம் கட்டும் தங்கர்பச்சான்

பள்ளிக்கூடம் கட்டும் தங்கர்பச்சான்

Subscribe to Oneindia Tamil

தங்கர்பச்சான் பள்ளிக் கூடம் கட்டவுள்ளார். இது தனது படத்திற்காக.

சிறந்த ஒளிப்பதிவாளரான தங்கர் இயக்குனராக மாறி கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரது இயக்கத்தில்வெளியான அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி ஆகிய நான்கு படங்களுமேமிகப் பெரிய வெற்றியைப் பெற்ற நல்ல படங்கள்.

தற்போது பெரியார் படத்திற்கு ஒளிப்பதிவு (குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் தவிர!) செய்து வரும் தங்கர், அடுத்தபடத்தை இயக்கும் வேலையில் மும்முரமாகி விட்டார். இதுவும் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போல ரீமேக்படம்தான்.

பள்ளிக்கூடம் என்று இப்படத்திற்குப் பெயர் வைத்துள்ளார் தங்கர். விஸ்வாஸ் சுந்தர் படத்தைத் தயாரிக்கிறார்.ஸ்னேகா ஹீரோயினாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஷ்ரேயா ரெட்டி நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பை ஆண்டிமடத்தில் தொடங்குகிறார் தங்கர். படத்தின் விசேஷம் என்னவென்றால்,இப்படம் முழுக்க முழுக்க பள்ளிக்கூடத்திலேயே நடக்கப் போகிறதாம். இதற்காக ஒரு பள்ளிக் கூடத்தையேகட்ட ஆரம்பித்துள்ளார் தங்கர்.

அதாவது ஆண்டிமடத்தில் உள்ள ஒரு பள்ளிக் கூட வளாகத்தில் இந்தக் கட்டடம் கட்டப்படுகிறது. படப்பிடிப்புமுழுவதும் முடிந்த பின்னர் இந்தக கட்டடத்தை அந்தப் பள்ளிக்கே அன்பளிப்பாக வழங்கவுள்ளாராம் தங்கர்.

வழக்கமாக எதுவாக இருந்தாலும் செட் போடுவதுதானே சினிமாக்காரர்கள் வழக்கம் என்று தங்கரிடம்ஆச்சரியப்பட்டால், உண்மைதான். செட் போட்டால் படப்பிடிப்பு முடிந்தவுடன் அதை தூக்கி கடாசியாகனும்.ஆனால் எனது பள்ளிக் கூட படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்தக் கட்டடம் மாணவர்களுக்கு உதவுமே என்கிறார்புன்னகையுடன்.

நல்ல ஐடியாதான். பள்ளிக்கூடத்தை சிறப்பாக, சிக்கல் இல்லாமல் நடத்தி நல்ல வாத்தியார் என்ற பெயரைதங்கர் எடுக்கட்டும்..

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil