திடீரென நிறுத்தப்பட்ட டாப் ஹீரோக்களின் பட ஷுட்டிங்... இது தான் காரணமா ?
சென்னை : விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக மீதமுள்ள காட்சிகளை எடுப்பதற்காக பீஸ்ட் படக்குழு விரைவில் மீண்டும் ஜார்ஜியா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. நான்கு கட்ட படப்பிடிப்புக்கள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கள் விரைவில் துவங்கப்பட உள்ளது.
இதே போல் டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஷுட்டிங், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்து விட்டது. இன்னும் இரண்டு பாடல்கள் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளது. இவற்றை சென்னை, கோவா போன்ற இடங்களில் படமாக்க டைரக்டர் திட்டமிட்டுள்ளார்.

ரிலீசுக்கு தயாராகும் படங்கள்
எதற்கும் துணிந்தவன் படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்திலும், பீஸ்ட் படத்தை 2022 ம் ஆண்டு பொங்கலுக்கும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இந்த படங்களின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

நிறுத்தப்பட்ட ஷுட்டிங்
அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டு படங்களையுமே சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படங்களின் ஷுட்டிங் தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. விஜய், சூர்யா படங்கள் மட்டுமல்ல கார்த்தி நடிக்கும் விருமன் படம் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் பலரும் நடிக்கும் படங்களின் ஷுட்டிங்குகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது தான் காரணமா
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக படங்களின் ஷுட்டிங் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளதாம். ஒரு வாரத்திற்கு பிறகு நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை பொருத்தே மீண்டும் ஷுட்டிங் எப்போது துவங்கும் என்பது முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

புலம்பும் தயாரிப்பாளர்கள்
இதற்கிடையில் பல படங்களின் ஷுட்டிங்கிற்காக தயார் செய்யப்பட்ட செட்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தான் கொரோனா, லாக்டவுன் முடிந்து ஒருவழியாக ஷுட்டிங்குகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. அதற்குள் மழை வந்து இப்படி ஷுட்டிங்கை பாதித்து விட்டதே என பலர் புலம்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











