Just In
- 8 min ago
டைட்டிலை மாத்துங்க... உதயநிதி படத்துக்கு இப்படியொரு சிக்கலா?
- 12 hrs ago
சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி
- 13 hrs ago
நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு!
- 14 hrs ago
பாவம் யாரு பெத்த புள்ளையோ.. நம்மள நம்பி இவ்ளோ புரொமோஷன் பண்றாங்க.. யங் நடிகரின் மைண்ட் வாய்ஸ்
Don't Miss!
- News
கண்களில் கோபம்.. லத்தியால் தாக்கிய போலீசை எதிர்த்து நின்ற மாணவி.. என்ன ஒரு வீரம்.. வைரல் வீடியோ!
- Lifestyle
இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...!
- Sports
என்ன திட்டு திட்டுனீங்க? இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்!
- Automobiles
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
- Finance
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!
- Technology
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல்! - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்
மிகச்சரியான திட்டமிடலும் துல்லியமான கணிப்புகளும் இருந்தால் நினைத்தபடி படப்பிடிப்பை நடத்தலாம் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் 'ட்ரிப்' திரைப்படம். கடந்த நவம்பர் மாதம் தலைக்கோணாவில் தொடங்கிய படப்பிடிப்பு, 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று முதல் கட்டத்தை நிறைவு செய்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.

படம் குறித்து கூறிய இயக்குநர் டெனிஸ், "முதல் கட்ட படப்பிடிப்பின்போது பலத்த மழை, வெள்ளப் பெருக்கு என்று பல கடுமையான சவால்களை எதிர்கொண்டோம். ஆயினும் எந்தவித சமரசமும் இல்லாமல், நாங்கள் திட்டமிட்டபடியே படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்" என்றார்.

இப்பட்டி இயற்கை சீற்றத்தால் மிரட்டப்பட்ட படக்குழுவினரை புலி ஒன்றும் அச்சுறுத்தியிருக்கிறது. புலியின் திடீர் வருகையால் அச்சமடைந்த படக்குழுவினர் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் மிக பாதுகாப்பாக படப்பிடிப்பை நடத்தி முடித்தாலும், புலியின் அச்சுறுத்தலை இன்னமும் மறக்க முடியாமல் இருக்கிறார்களாம்.

இப்படி பலவிதமான சவால்களை எதிர்கொண்டாலும், உள்ளூர் வாசிகள், வன இலாக்கா அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்போடு, படப்பிடிப்பை வெற்றிகரமாகா முடித்தவர்கள், யோகி பாபு மற்றும் கருணாகரன் இருவரது கலகலப்பான பேச்சும் செயல்களும், பணியின் சுமையைக் குறைத்து சுகமானதாக மாற்றியதாக தெரிவிக்கும் பட்டக்குழுவினர், இவர்கள் இருவரும் வரும் அனைத்துக் காட்சிகளும் ரசிகர்களுக்கு சர்க்கரையாக இனிக்கும் என்றும் கூறுகிறார்கள்.
