கப்பலில் காணாமல் போன திரிஷா!

By Sudha

Trisha
மன்மதன் அம்பு படப்பிடிப்புக்காக இத்தாலியில் முகாமிட்டுள்ள நடிகை திரிஷா, அங்குள்ள சொகுசுக் கப்பலில் காணாமல் போய் விட்டார். 2 மணி நேர தேடுதலுக்குப் பின்னர், ஷாப்பிங் மையத்தில் வைத்து அவரை கண்டுபிடித்து கூட்டி வந்தனர்.

கமல்ஹாசன், திரிஷா நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் மன்மதன் அம்பு. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இத்தாலியில் நடந்து வருகிறது. கமல்ஹாசன், திரிஷா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை இத்தாலி நாட்டில் உள்ள பிரபலமான பிரமாண்டமான சொகுசுக் கப்பலில் படமாக்கி வருகின்றனர்.

பல தளங்களை உடைய பிரமாண்டக் கப்பல் என்பதால் யாரும் கூட்டத்தில் காணாமல் போய் விடக் கூடாது என்று கவனத்துடன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கமல், திரிஷா சம்பந்தபப்ட்ட காட்சிகளை படமாக்கியபோது ஒரு ஃபுளோரில் காட்சிகளை முடித்து விட்டு அடுத்த ஃபுளோருக்குக் கிளம்பினர். திரிஷாவும், அவரது அம்மா உமாவும் அவர்களுடன் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக திரிஷா தனது அம்மாவை விட்டுப் பிரிந்து விட்டார். இதனால் உமா அதிர்ச்சி அடைந்தார். படப்பிடிப்புக் குழுவினரும் பதட்டமடைந்தனர். கப்பல் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தகவல் கூற நாலாபக்கமும் செக்யூரிட்டிகளை அனுப்பி தேடினர். கடைசியி்ல் ஒரு ஷாப்பிங் மையத்தில் நின்று கொண்டிருந்த திரிஷாவை கண்டுபிடித்து மீட்டு கொண்டு வந்து படப்பிடிப்புக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகே உமா உள்ளிட்டோருக்கு போன உயிர் திரும்பி வந்தது.

இதுகுறித்து சென்னை திரும்பியுள்ள உமா கூறுகையில், நான் பயந்தே போய் விட்டேன். அது மிகப் பெரிய கப்பல். ஒரு இடத்திலிருந்து மறு முனைக்குப் போக கிலோமீட்டர் கணக்கில் போக வேண்டும். திரிஷா கூட்டத்தில் கலந்து போய் விட்டதால் நான் மிகவும் பயந்து போய் விட்டேன். இருப்பினும் 2 மணி நேர தேடலுக்குப் பின்னர் அவரை மீட்டுக் கொண்டு வந்தனர் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X