»   »  சூர்யா-த்ரிஷா ஜோடி சேரும் ஆறு தெலுங்கில் படு பிஸியாகிவிட்ட த்ரிஷா இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் தமிழுக்கு வருகிறார்.சாமி படம் மூலம் த்ரிஷாவை ஹிட் ஆக்கி உச்சத்தில் கொண்டு போய்விட்ட ஹரி தான் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின்பெயர் ஆறு.இந்தப் படத்தைத் தயாரிப்பது இயக்குனரும் ஹரியின் குருவுமாகிய சரண். தனது சொந்தப் பட நிறுவனமான ஜெமினிபுரடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் ஆறு படத்தை தயாரிக்கிறார்.பெரும் ஹிட் கொடுத்து வரும் விஜய்யின் படங்களில் நடிக்க மட்டுமே தமிழுக்கு வந்து போன த்ரிஷா மற்றபடி தெலுங்கில் மகாபிஸி. ஒரு படத்துக்கு ரூ. 90 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில் அவரை சூர்யாவுக்கு ஜோடியாக்கியிருக்கிறார்கள். இந்த இருவரும் ஜோடி சேரும் இரண்டாவது படம், ஆறு. முதல்படமான மெளனம் பேசியதே பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.த்ரிஷாவுக்கு இந்தப் படத்தில் சூப்பர் கேரக்டராம். அதாவது சாமி படத்தில் மாமியாக வந்து வசீகரித்ததைப் போல இந்தப்படத்திலும் அவருக்கு அட்டகாசமான கேரக்டராம். அதேபோல சூர்யாவுக்கும் மிக வித்தியாசமான பாத்திரமாம். ஸ்பெஷல்கெட்டப்புடன் வரப் போகும் சூர்யா, இதற்காக லண்டன் சென்று தனது உருவத்திற்கு மெருகேற்றப் போகிறார்.இதுவரை நெல்லை, மதுரை, கோவையைச் சுற்றியே படம் பண்ணிக் கொண்டிருந்த ஹரி முதல் முறையாக சென்னைக்குவருகிறார். ஆறு கதை, சென்னையை மையமாகக் கொண்டதாம்.சச்சினுக்கு இசை அமைத்து கோர்ட் கேஸில் படத்தை மாட்டிவிட்ட தெலுங்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தான் இப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். ப்ரியன் கேமராவைப் பிடிக்கிறார். ஜூன் மாதம் படத்தைத் தொடங்கி தீபாவளிக்கு ரிலீஸ்செய்யத் திட்டமாம்.தெலுங்கில் படு ஸ்பீடாகப் போய்க் கொண்டிருக்கும் த்ரிஷா, அங்கு கோடியை நெருக்கி சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதால்,இந்தப் படத்தில் நடிக்கவும் ரூ. 50 லட்சம் கேட்டு வாங்கியதாக சொல்கிறார்கள்.இதன்மூலம் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் இப்போதைக்கு த்ரிஷா தான். ஒரு காலத்தில் ஜோதிகா முதலிடத்தில்இருந்தார்.இந் நிலையில் தனது அடுத்த படத்தில் த்ரிஷாவையே ஹீரோயினாக்க விக்ரம் முடிவு செய்துள்ளாராம். அதற்குள் சம்பளம் ஒரு 10லகரம் கூடினாலும் கூடிவிடும்.. சொல்ல முடியாது.இதற்கிடையே, தமிழில் பொருத்தமான ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த விஜய்-த்ரிஷா இடையே இப்போது பழையநெருக்கம் இல்லையாம். இதற்கு காரணம் ஜெனிலியா தான் என்று பொருமிக் கொண்டிருக்கிறதாம் த்ரிஷா தரப்பு.கில்லி படம் மூலம் விழுந்து கிடந்த தன்னுடைய மார்க்கெட்டை விஜய் மீண்டும் பில்டப் செய்து கொண்டார். இந்தப் படத்தின்வெற்றிக்கு த்ரிஷாவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஜய் நினைத்தாரோ, என்னவோ அடுத்து வெளியானதிருப்பாச்சியிலும் த்ரிஷாவையே ஜோடியாக போட்டார். இந்தப் படமும் நன்றாக ஓடியதால் விஜய்-த்ரிஷா இடையே நெருக்கம் மேலும் அதிகமானது. அடுத்து நடிக்கும் சிவகாசிபடத்திலும் த்ரிஷா தான் நாயகி ஆவார் என்று கூறப்பட்டது.ஆனால் சச்சின் படம் வெளிவந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாம். இந்தப் படத்தில் ஜெனிலியா-விஜய் இடையேஏற்பட்ட நெருக்கத்தை பார்த்து சச்சின் யூனிட்டே மூக்கின் மேல் விரலை வைத்து பார்த்துக் கொண்டிருந்ததாம்.புதிய கம்பெனி கிடைத்து விட்டதால் பழைய கம்பெனியை கழட்டி விடுவது தானே நியாயம். இதனால் சிவகாசி படத்தில் த்ரிஷாஇல்லை. அவருக்குப் பதில் மீண்டும் ஜெனிலியாவுக்கே வாய்ப்பு தர விஜய் முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள்.இதில் விஜய்க்கு தங்கச்சியாக ஸ்ரீதேவிகா நடிப்பது தான் உங்களுக்குத் தெரியுமே.

சூர்யா-த்ரிஷா ஜோடி சேரும் ஆறு தெலுங்கில் படு பிஸியாகிவிட்ட த்ரிஷா இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் தமிழுக்கு வருகிறார்.சாமி படம் மூலம் த்ரிஷாவை ஹிட் ஆக்கி உச்சத்தில் கொண்டு போய்விட்ட ஹரி தான் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின்பெயர் ஆறு.இந்தப் படத்தைத் தயாரிப்பது இயக்குனரும் ஹரியின் குருவுமாகிய சரண். தனது சொந்தப் பட நிறுவனமான ஜெமினிபுரடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் ஆறு படத்தை தயாரிக்கிறார்.பெரும் ஹிட் கொடுத்து வரும் விஜய்யின் படங்களில் நடிக்க மட்டுமே தமிழுக்கு வந்து போன த்ரிஷா மற்றபடி தெலுங்கில் மகாபிஸி. ஒரு படத்துக்கு ரூ. 90 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில் அவரை சூர்யாவுக்கு ஜோடியாக்கியிருக்கிறார்கள். இந்த இருவரும் ஜோடி சேரும் இரண்டாவது படம், ஆறு. முதல்படமான மெளனம் பேசியதே பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.த்ரிஷாவுக்கு இந்தப் படத்தில் சூப்பர் கேரக்டராம். அதாவது சாமி படத்தில் மாமியாக வந்து வசீகரித்ததைப் போல இந்தப்படத்திலும் அவருக்கு அட்டகாசமான கேரக்டராம். அதேபோல சூர்யாவுக்கும் மிக வித்தியாசமான பாத்திரமாம். ஸ்பெஷல்கெட்டப்புடன் வரப் போகும் சூர்யா, இதற்காக லண்டன் சென்று தனது உருவத்திற்கு மெருகேற்றப் போகிறார்.இதுவரை நெல்லை, மதுரை, கோவையைச் சுற்றியே படம் பண்ணிக் கொண்டிருந்த ஹரி முதல் முறையாக சென்னைக்குவருகிறார். ஆறு கதை, சென்னையை மையமாகக் கொண்டதாம்.சச்சினுக்கு இசை அமைத்து கோர்ட் கேஸில் படத்தை மாட்டிவிட்ட தெலுங்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தான் இப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். ப்ரியன் கேமராவைப் பிடிக்கிறார். ஜூன் மாதம் படத்தைத் தொடங்கி தீபாவளிக்கு ரிலீஸ்செய்யத் திட்டமாம்.தெலுங்கில் படு ஸ்பீடாகப் போய்க் கொண்டிருக்கும் த்ரிஷா, அங்கு கோடியை நெருக்கி சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதால்,இந்தப் படத்தில் நடிக்கவும் ரூ. 50 லட்சம் கேட்டு வாங்கியதாக சொல்கிறார்கள்.இதன்மூலம் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் இப்போதைக்கு த்ரிஷா தான். ஒரு காலத்தில் ஜோதிகா முதலிடத்தில்இருந்தார்.இந் நிலையில் தனது அடுத்த படத்தில் த்ரிஷாவையே ஹீரோயினாக்க விக்ரம் முடிவு செய்துள்ளாராம். அதற்குள் சம்பளம் ஒரு 10லகரம் கூடினாலும் கூடிவிடும்.. சொல்ல முடியாது.இதற்கிடையே, தமிழில் பொருத்தமான ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த விஜய்-த்ரிஷா இடையே இப்போது பழையநெருக்கம் இல்லையாம். இதற்கு காரணம் ஜெனிலியா தான் என்று பொருமிக் கொண்டிருக்கிறதாம் த்ரிஷா தரப்பு.கில்லி படம் மூலம் விழுந்து கிடந்த தன்னுடைய மார்க்கெட்டை விஜய் மீண்டும் பில்டப் செய்து கொண்டார். இந்தப் படத்தின்வெற்றிக்கு த்ரிஷாவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஜய் நினைத்தாரோ, என்னவோ அடுத்து வெளியானதிருப்பாச்சியிலும் த்ரிஷாவையே ஜோடியாக போட்டார். இந்தப் படமும் நன்றாக ஓடியதால் விஜய்-த்ரிஷா இடையே நெருக்கம் மேலும் அதிகமானது. அடுத்து நடிக்கும் சிவகாசிபடத்திலும் த்ரிஷா தான் நாயகி ஆவார் என்று கூறப்பட்டது.ஆனால் சச்சின் படம் வெளிவந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாம். இந்தப் படத்தில் ஜெனிலியா-விஜய் இடையேஏற்பட்ட நெருக்கத்தை பார்த்து சச்சின் யூனிட்டே மூக்கின் மேல் விரலை வைத்து பார்த்துக் கொண்டிருந்ததாம்.புதிய கம்பெனி கிடைத்து விட்டதால் பழைய கம்பெனியை கழட்டி விடுவது தானே நியாயம். இதனால் சிவகாசி படத்தில் த்ரிஷாஇல்லை. அவருக்குப் பதில் மீண்டும் ஜெனிலியாவுக்கே வாய்ப்பு தர விஜய் முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள்.இதில் விஜய்க்கு தங்கச்சியாக ஸ்ரீதேவிகா நடிப்பது தான் உங்களுக்குத் தெரியுமே.

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் படு பிஸியாகிவிட்ட த்ரிஷா இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

சாமி படம் மூலம் த்ரிஷாவை ஹிட் ஆக்கி உச்சத்தில் கொண்டு போய்விட்ட ஹரி தான் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின்பெயர் ஆறு.

இந்தப் படத்தைத் தயாரிப்பது இயக்குனரும் ஹரியின் குருவுமாகிய சரண். தனது சொந்தப் பட நிறுவனமான ஜெமினிபுரடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் ஆறு படத்தை தயாரிக்கிறார்.

பெரும் ஹிட் கொடுத்து வரும் விஜய்யின் படங்களில் நடிக்க மட்டுமே தமிழுக்கு வந்து போன த்ரிஷா மற்றபடி தெலுங்கில் மகாபிஸி. ஒரு படத்துக்கு ரூ. 90 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் அவரை சூர்யாவுக்கு ஜோடியாக்கியிருக்கிறார்கள். இந்த இருவரும் ஜோடி சேரும் இரண்டாவது படம், ஆறு. முதல்படமான மெளனம் பேசியதே பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.


த்ரிஷாவுக்கு இந்தப் படத்தில் சூப்பர் கேரக்டராம். அதாவது சாமி படத்தில் மாமியாக வந்து வசீகரித்ததைப் போல இந்தப்படத்திலும் அவருக்கு அட்டகாசமான கேரக்டராம். அதேபோல சூர்யாவுக்கும் மிக வித்தியாசமான பாத்திரமாம். ஸ்பெஷல்கெட்டப்புடன் வரப் போகும் சூர்யா, இதற்காக லண்டன் சென்று தனது உருவத்திற்கு மெருகேற்றப் போகிறார்.

இதுவரை நெல்லை, மதுரை, கோவையைச் சுற்றியே படம் பண்ணிக் கொண்டிருந்த ஹரி முதல் முறையாக சென்னைக்குவருகிறார். ஆறு கதை, சென்னையை மையமாகக் கொண்டதாம்.

சச்சினுக்கு இசை அமைத்து கோர்ட் கேஸில் படத்தை மாட்டிவிட்ட தெலுங்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தான் இப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். ப்ரியன் கேமராவைப் பிடிக்கிறார். ஜூன் மாதம் படத்தைத் தொடங்கி தீபாவளிக்கு ரிலீஸ்செய்யத் திட்டமாம்.

தெலுங்கில் படு ஸ்பீடாகப் போய்க் கொண்டிருக்கும் த்ரிஷா, அங்கு கோடியை நெருக்கி சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதால்,இந்தப் படத்தில் நடிக்கவும் ரூ. 50 லட்சம் கேட்டு வாங்கியதாக சொல்கிறார்கள்.


இதன்மூலம் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் இப்போதைக்கு த்ரிஷா தான். ஒரு காலத்தில் ஜோதிகா முதலிடத்தில்இருந்தார்.

இந் நிலையில் தனது அடுத்த படத்தில் த்ரிஷாவையே ஹீரோயினாக்க விக்ரம் முடிவு செய்துள்ளாராம். அதற்குள் சம்பளம் ஒரு 10லகரம் கூடினாலும் கூடிவிடும்.. சொல்ல முடியாது.

இதற்கிடையே, தமிழில் பொருத்தமான ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த விஜய்-த்ரிஷா இடையே இப்போது பழையநெருக்கம் இல்லையாம். இதற்கு காரணம் ஜெனிலியா தான் என்று பொருமிக் கொண்டிருக்கிறதாம் த்ரிஷா தரப்பு.

கில்லி படம் மூலம் விழுந்து கிடந்த தன்னுடைய மார்க்கெட்டை விஜய் மீண்டும் பில்டப் செய்து கொண்டார். இந்தப் படத்தின்வெற்றிக்கு த்ரிஷாவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஜய் நினைத்தாரோ, என்னவோ அடுத்து வெளியானதிருப்பாச்சியிலும் த்ரிஷாவையே ஜோடியாக போட்டார்.


இந்தப் படமும் நன்றாக ஓடியதால் விஜய்-த்ரிஷா இடையே நெருக்கம் மேலும் அதிகமானது. அடுத்து நடிக்கும் சிவகாசிபடத்திலும் த்ரிஷா தான் நாயகி ஆவார் என்று கூறப்பட்டது.

ஆனால் சச்சின் படம் வெளிவந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாம். இந்தப் படத்தில் ஜெனிலியா-விஜய் இடையேஏற்பட்ட நெருக்கத்தை பார்த்து சச்சின் யூனிட்டே மூக்கின் மேல் விரலை வைத்து பார்த்துக் கொண்டிருந்ததாம்.

புதிய கம்பெனி கிடைத்து விட்டதால் பழைய கம்பெனியை கழட்டி விடுவது தானே நியாயம். இதனால் சிவகாசி படத்தில் த்ரிஷாஇல்லை. அவருக்குப் பதில் மீண்டும் ஜெனிலியாவுக்கே வாய்ப்பு தர விஜய் முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள்.

இதில் விஜய்க்கு தங்கச்சியாக ஸ்ரீதேவிகா நடிப்பது தான் உங்களுக்குத் தெரியுமே.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil