For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  த்ரிஷா கொடுக்கும் கடுக்காய் ஓல்டுகளும் கோல்டுகள் தான் என்ற கணக்கில் மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நமீதா போன்ற சில இளம் நடிகைகள்பட்டையைக் கிளப்பி வரும் நேரத்தில், சேர்ந்தால் சிறிசுகளுடன் மட்டும்தான் சேருவேன் என்று படு பிடிவாதமாக சிலநடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதில் திரிஷா படு தீவிரமானவர். இதுவரை அவர் மூத்த நடிகர்கள் யாருடனும் ஜோடி சேர்ந்ததில்லை. தமிழில் மட்டுமல்லாது,தெலுங்கிலும் இதே கொள்கையை படு உறுதியாக கடைப்பிடித்து வருகிறார்.விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் (இவரு சிறிசா?) என முன்னணி இளம் நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடியாக நடித்துள்ள த்ரிஷா,திடீரென ரஜினியுடன் ஜோடி சேரக் கூடிய வாய்ப்பு வந்தபோது த்ரில் ஆகி, கொள்கைக் குழப்பத்தில் ஆழ்ந்தார்.இருந்தாலும், ரஜினியுடன் நடித்தால் பெயருடன், பெருத்த டப்பும் கிடைக்கும் என்பதால் கொள்கையைத் தற்காலிகமாக தூக்கிகடாசி விட்டு, ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது என் பாக்கியம் என்ற ரீதியில் நூல் விட்டுப் பேசஆரம்பித்தார்.ஆனால் அவருக்கு அல்வா கொடுப்பது போல, த்ரிஷாவுக்கு கடும் போட்டியாக உருவாகியுள்ள மழை நாயகி ஷ்ரேயாவை புக்பண்ணி விட்டது ஏவி.எம். நிறுவனம். இதனால் கடுப்பாகிப் போன த்ரிஷா, ரஜினியே என்னிடம் கால்ஷீட் கேட்டால் கூடகொடுப்பதற்கு கால்ஷீட் இல்லை, அம்புட்டு பிஸி நான் என்று உல்டாவாக பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். அத்தோடு நில்லாமல், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஸ்டாலின் என்ற முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்ககொள்கையை மீண்டும் தளர்த்தி உடனே கால்ஷீட் கொடுத்துவிட்டார்.த்ரிஷாவின் இந்தப் போக்கினால் தெலுங்கு நடிகர்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளார்களாம்.சிரஞ்சீவியுடன் த்ரிஷா நடித்தால் இவர்களுக்கு என்ன என்று நீங்கள் கேட்கலாம். மேட்டர் இருக்கிறது.அதிருப்தி அடைந்துள்ள நடிகர்கள் எல்லாம் சிரஞ்சீவி வயசுக்காரர்கள் தான், ஏற்கனவே த்ரிஷாவுடன் ஜோடி சேர படுபிரயத்தனம் செய்தும், சம்பளம் எவ்வளவு வேண்டுமானாலும் தர்றோம் என்று சொல்லியும் கூட ஏமாந்து போனவர்கள்.ஏமாந்தவர்களில் முக்கியமானவர் மோகன் பாபு. ரஜினிக்கு படு நெருக்கமான தோஸ்தான இவரும் சின்னப் புள்ளைகள் கூடமட்டுமே நடிக்க விரும்புவார். இவருக்கு வயது 60யை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தாலும் கூட நடிப்பவருக்கு23க்குள் இருக்க வேண்டும் என்ற கொள்ளைப் போராளி இவர். தன்னுடன் ஜோடியாக நடிக்க த்ரிஷாவுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை பரிசீலனை கூட செய்யாமல் உடனடியாகரிஜக்ட் செய்து மோகன் பாபுவை எரிச்சல்படுத்தி விட்டாராம் த்ரிஷா.அதேபோல, என்.டி.ஆர். மகனான பாலகிருஷ்ணாவும், த்ரிஷாவுடன் சேரும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இவரும் பெரும்விக் பார்ட்டி. குளிக்கப் போனாலும் மேக்-அப் போடும் ஆசாமி. இவரது ஆசையையும் நிறைவேற்றவில்லையாம் த்ரிஷா.வயதில் மூத்தவர்களுடன் ஜோடி சேருவதில்லை என்ற தனது பாலிஸியை நிராகரிப்புக்கான காரணமாக கூறியுள்ளார் த்ரிஷா.இப்படிப்பட்ட நிலையில் தங்களது வயதை ஒத்த சிரஞ்சீவியுடன் நடிக்கவும் ரஜினிக்கு ஜோடி சேரவும் மட்டும் த்ரிஷா முன் வந்ததுஏன் என்று மோகன்பாபு உள்ளிட்ட மூத்தோர் வட்டாரம் அதிருப்தி அடைந்துள்ளதாம்.தெலுங்கில் மட்டுமல்ல, த்ரிஷாவுடன் ஜோடி சேர ஆசைப்பட்டு சரத்குமார், சத்யராஜ் போன்ற தமிழ் நடிகர்கள் ஏற்கனவேஏமாந்தவர்கள் லிஸ்ட்டில் உள்ளனர். இப்படியே போனால் த்ரிஷாவை நம்பி ஏமாந்தவர்கள் என பெரிய பட்டியலே கிளம்பும்போலிருக்கே..

  By Staff
  |
  ஓல்டுகளும் கோல்டுகள் தான் என்ற கணக்கில் மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நமீதா போன்ற சில இளம் நடிகைகள்பட்டையைக் கிளப்பி வரும் நேரத்தில், சேர்ந்தால் சிறிசுகளுடன் மட்டும்தான் சேருவேன் என்று படு பிடிவாதமாக சிலநடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  அதில் திரிஷா படு தீவிரமானவர். இதுவரை அவர் மூத்த நடிகர்கள் யாருடனும் ஜோடி சேர்ந்ததில்லை. தமிழில் மட்டுமல்லாது,தெலுங்கிலும் இதே கொள்கையை படு உறுதியாக கடைப்பிடித்து வருகிறார்.

  விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் (இவரு சிறிசா?) என முன்னணி இளம் நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடியாக நடித்துள்ள த்ரிஷா,திடீரென ரஜினியுடன் ஜோடி சேரக் கூடிய வாய்ப்பு வந்தபோது த்ரில் ஆகி, கொள்கைக் குழப்பத்தில் ஆழ்ந்தார்.

  இருந்தாலும், ரஜினியுடன் நடித்தால் பெயருடன், பெருத்த டப்பும் கிடைக்கும் என்பதால் கொள்கையைத் தற்காலிகமாக தூக்கிகடாசி விட்டு, ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது என் பாக்கியம் என்ற ரீதியில் நூல் விட்டுப் பேசஆரம்பித்தார்.

  ஆனால் அவருக்கு அல்வா கொடுப்பது போல, த்ரிஷாவுக்கு கடும் போட்டியாக உருவாகியுள்ள மழை நாயகி ஷ்ரேயாவை புக்பண்ணி விட்டது ஏவி.எம். நிறுவனம். இதனால் கடுப்பாகிப் போன த்ரிஷா, ரஜினியே என்னிடம் கால்ஷீட் கேட்டால் கூடகொடுப்பதற்கு கால்ஷீட் இல்லை, அம்புட்டு பிஸி நான் என்று உல்டாவாக பேட்டி கொடுக்க ஆரம்பித்தார்.

  அத்தோடு நில்லாமல், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஸ்டாலின் என்ற முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்ககொள்கையை மீண்டும் தளர்த்தி உடனே கால்ஷீட் கொடுத்துவிட்டார்.

  த்ரிஷாவின் இந்தப் போக்கினால் தெலுங்கு நடிகர்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளார்களாம்.

  சிரஞ்சீவியுடன் த்ரிஷா நடித்தால் இவர்களுக்கு என்ன என்று நீங்கள் கேட்கலாம். மேட்டர் இருக்கிறது.

  அதிருப்தி அடைந்துள்ள நடிகர்கள் எல்லாம் சிரஞ்சீவி வயசுக்காரர்கள் தான், ஏற்கனவே த்ரிஷாவுடன் ஜோடி சேர படுபிரயத்தனம் செய்தும், சம்பளம் எவ்வளவு வேண்டுமானாலும் தர்றோம் என்று சொல்லியும் கூட ஏமாந்து போனவர்கள்.

  ஏமாந்தவர்களில் முக்கியமானவர் மோகன் பாபு. ரஜினிக்கு படு நெருக்கமான தோஸ்தான இவரும் சின்னப் புள்ளைகள் கூடமட்டுமே நடிக்க விரும்புவார். இவருக்கு வயது 60யை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தாலும் கூட நடிப்பவருக்கு23க்குள் இருக்க வேண்டும் என்ற கொள்ளைப் போராளி இவர்.

  தன்னுடன் ஜோடியாக நடிக்க த்ரிஷாவுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை பரிசீலனை கூட செய்யாமல் உடனடியாகரிஜக்ட் செய்து மோகன் பாபுவை எரிச்சல்படுத்தி விட்டாராம் த்ரிஷா.

  அதேபோல, என்.டி.ஆர். மகனான பாலகிருஷ்ணாவும், த்ரிஷாவுடன் சேரும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இவரும் பெரும்விக் பார்ட்டி. குளிக்கப் போனாலும் மேக்-அப் போடும் ஆசாமி. இவரது ஆசையையும் நிறைவேற்றவில்லையாம் த்ரிஷா.

  வயதில் மூத்தவர்களுடன் ஜோடி சேருவதில்லை என்ற தனது பாலிஸியை நிராகரிப்புக்கான காரணமாக கூறியுள்ளார் த்ரிஷா.

  இப்படிப்பட்ட நிலையில் தங்களது வயதை ஒத்த சிரஞ்சீவியுடன் நடிக்கவும் ரஜினிக்கு ஜோடி சேரவும் மட்டும் த்ரிஷா முன் வந்ததுஏன் என்று மோகன்பாபு உள்ளிட்ட மூத்தோர் வட்டாரம் அதிருப்தி அடைந்துள்ளதாம்.

  தெலுங்கில் மட்டுமல்ல, த்ரிஷாவுடன் ஜோடி சேர ஆசைப்பட்டு சரத்குமார், சத்யராஜ் போன்ற தமிழ் நடிகர்கள் ஏற்கனவேஏமாந்தவர்கள் லிஸ்ட்டில் உள்ளனர். இப்படியே போனால் த்ரிஷாவை நம்பி ஏமாந்தவர்கள் என பெரிய பட்டியலே கிளம்பும்போலிருக்கே..


   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X