உலகநாயகனின் பிறந்தநாள்... விக்ரம் படப்பிடிப்புதளத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம் !
சென்னை : உலகநாயகன் கமலஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இப்படத்தில் கமல், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விக்ரம்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், ரமேஷ் திலக், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் ஜோஸ், மேகா ஆகாஷ், ஆடுகளம் முருகதாஸ், ஷிவாணி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னணி ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ஃபிலொமின்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். பல கட்டங்களாக தொடர்ந்து முழுவீச்சில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

உலகநாயகனின் பிறந்தநாள்
இந்நிலையில், விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் உலகநாயகனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில், பகத் பாசில், இயக்குனர் லோகேஸ் கனகராஜ், நடன இயக்குனர் சாண்டி விக்ரம் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இணையத்தில் இந்தபுகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிறந்த நாள் சப்ரைஸ்
விக்ரம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கமல் பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைசாக இருக்கும்.

இந்தியன் 2
விக்ரம் படத்துக்கு முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வந்தார் கமல். இதனை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின்போது லைகா நிறுவனம் ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சினை உருவானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications











