Don't Miss!
- News
ஸ்டாலின் திடீர் விசிட்.. நெகிழ்ந்த அருந்ததியர்கள் - "சேர்ல உக்காருங்க தம்பி" பாசமாக சொன்ன முதல்வர்
- Sports
இதுமட்டும் நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்??.. உலக சாதனைக்கே வரவிருந்த விணை.. பும்ராவின் அதிர்ஷ்டம்!!
- Finance
'இந்த' துறையில் ரூ.30 கோடி-யா.. அசத்தும் ஈரோடு ஆர்த்தி..!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Automobiles
உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா? இனி கவனமா இருக்கணும்!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஆஹா! வடிவேலு பக்கத்தில் பிக் பாஸ் ஷிவானி.. மைசூர் பேலஸில் நிறைவடைந்த செகண்ட் ஷெட்யூல்!
சென்னை: வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மைசூர் மாளிகையில் நிறைவடைந்துள்ளதாக லைகா நிறுவனம் செம கிராண்டான குரூப் போட்டோவை போட்டு அறிவித்து இருக்கிறது.
லைகா தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கம்பேக் கொடுக்கப் போகும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பிக் பாஸ் ஷிவானி நாராயணன் நடித்து வருகிறார் எனும் தகவல் வெளியானதில் இருந்தே இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் எல்லாம் கூடுதல் ஆவலாக காத்திருக்கின்றனர்.
'தி
காஷ்மீர்
ஃபைல்ஸ்'
பாலிவுட்
பயப்படுகிறதா?..
'பின்
டிராப்
சைலன்ஸ்'
ஏன்?
..
விளாசிய
கங்கன
ரனாவத்!

வடிவேலு ரிட்டர்ன்ஸ்
இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் ஒரு பக்கம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டு ஷெட்யூல்களை முடித்துள்ள நடிகர் வடிவேலு, அடுத்தபடியாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் நேற்று கலந்து கொண்டார். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் என காஸ்டிங்கே கலக்கலாக இருக்கும் நிலையில், வடிவேலு கூடிய விரைவிலேயே தமிழ் சினிமாவுக்கு வேறலெவல் ரிட்டர்ன்ஸ் கொடுக்க காத்திருக்கிறார்.

மைசூர் பேலஸில்
பிரெண்ட்ஸ் படத்தில் இதுதான் பேலஸ் என வடிவேலு விஜய் மற்றும் சூர்யாவுக்கு அறிமுகப்படுத்தும் காட்சி தான் இந்த போட்டோவை பார்த்ததும் சட்டென ரசிகர்கள் நினைவுக்கு வந்து செல்லும். நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் இதுவரை மைசூர் பேலஸில் நடந்து வந்த நிலையில், இயக்குநர் சுராஜ் மூன்றாவது கட்ட படப்பிடிப்புக்காக அடுத்த லோகேஷன் சேஸிங்கில் இறங்கி உள்ளார்.

வடிவேலு பக்கத்தில் ஷிவானி
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடி இல்லை என்றும் வெளிநாட்டு நடிகை ஒருவர் ஜோடியாக நடிக்கிறார் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசியில் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நான் தான் வடிவேலு சாருடன் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்கிறேன் என அறிவித்து பல பிக் பாஸ் பிரபலங்களுக்கே பிபியை எகிற வைத்தார்.

இதுவல்லவா குரூப் போட்டோ
இயக்குநர் சுராஜ், வடிவேலு, வடிவேலு பக்கத்தில் ஷிவானி நாராயனன் மற்றும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வரும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டுமொத்த படக்குழுவும் மைசூர் பேலஸ் படிக்கெட்டில் அமர்ந்தபடி எடுத்துக் கொண்ட பிரம்மாண்ட குரூப் போட்டோவை தற்போது லைகா நிறுவனம் பதிவிட்டு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள ஹாட் அப்டேட்டை அறிவித்துள்ளது.

ஷிவுவை கொஞ்சும் ரசிகர்கள்
பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் வைகைப்புயல் வடிவேலு பக்கத்தில் செம க்யூட்டாக உட்கார்ந்து இருப்பதை பார்த்த அவரது சமூக வலைதள ரசிகர்கள் ஷுவு செம க்யூட் என கொஞ்சி வருகின்றனர். தலைவன் சிகப்பு கலர் டிரெஸ்சில் டாப் டக்கராக இருக்கிறாரே என மீம் கிரியேட்டர்கள் தங்கள் குலசாமியை வழிபட்டு வருகின்றனர்.