நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படக்குழுவுடன் லண்டனில் வடிவேலு... பாடல் கம்போசிங், சூட்டிங் நடத்த திட்டம்

லண்டன் : நடிகர் வடிவேலு நீண்ட காலங்களுக்கு பிறகு மீண்டும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

முதலில் அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் காமெடி நாயகனாக தனது பயணத்தை துவக்கியுள்ளார்.

சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியான நிலையில், தற்போது சூட்டிங் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலுவின் காமெடி கலாட்டாக்கள் எப்போதுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. வித்தியாசமான பாடி லாங்வேஜ், பஞ்ச் டயலாக்குகள் என ரசிகர்களை அதிகமான காலங்கள் கட்டிப் போட்டவர் வடிவேலு.

காமெடியில் ஆதிக்கம்

காமெடியில் ஆதிக்கம்

ஒரு காலகட்டத்தில் இவரது காமெடி இல்லாத படமே இல்லை என்று கூறுமளவிற்கு இவரது ஆதிக்கம் கோலிவுட்டில் காணப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தாமல் விலகியிருந்தார் வடிவேலு. இந்நிலையில் கோலிவுட்டில் தனது இரண்டாவது இன்னிங்சை தற்போது துவக்கியுள்ளார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்

முதலில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் இணைந்துள்ளார் வடிவேலு. டைரக்டர் சுராஜ் இயக்கும் இந்தப் படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் பூஜை சமீபத்தில் போடப்பட்டு மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

விறுவிறு படப்பிடிப்பு

விறுவிறு படப்பிடிப்பு

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுராஜ், வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது லண்டனில் உள்ளனர். அங்கு சில காட்சிகளை எடுக்கவும் சுராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

லண்டனில் வடிவேலு

லண்டனில் வடிவேலு

படத்திற்கு சந்தோஷ் நாராயணனன் இசையமைக்கவுள்ள நிலையில், அவரும் லண்டன் சென்றுள்ளார். அங்கு சில இசைக் கோர்ப்பு பணிகளை அவர் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுராஜ், வடிவேலு உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.

ரசிகர்கள் ஆவல்

ரசிகர்கள் ஆவல்

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலுவை பெரியத் திரையில் காண அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். முன்னதாக சுராஜ் இயக்கத்தில் தலைநகரம் படத்தில் நடித்துள்ள வடிவேலு, அந்தப் படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Recommended Video

Sivakarthikeyan Speech | Naai Sekar Title Issue | Vadivelu | Sathish | Filmibeat Tamil
நாய் சேகர் கேரக்டர்

நாய் சேகர் கேரக்டர்

இந்த கதாபாத்திரம், வடி வேலுவின் எவர்கிரீன் கேரக்டராக அமைந்துள்ள நிலையில், தற்போது அதே கதாபாத்திரத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் அவர் நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் சூட்டிங்கை ஒரே கட்டமாக நடத்தி முடித்து ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனமான லைகா திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X