»   »  ஜெ.வைத் தாக்கும் வசனம் பேச வடிவேலு மறுப்பு!

ஜெ.வைத் தாக்கும் வசனம் பேச வடிவேலு மறுப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏவும், நடிகருமான நெப்போலியன் நடிக்கும் வீரண்ணா படத்தில் முதல்வர் ஜெயலலிதாவைமறைமுகமாக தாக்கிப் பேசுவது போல இடம் பெற்ற வசனத்தைப் பேச மறுத்து நடிகர் வடிவேலு படப்பிடிப்பிலிருந்து கிளம்பிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெப்போலியன் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் வீரண்ணா. இப்படத்தை கலாநிதி என்பவர்இயக்குகிறார். ஏவி.எம். ஸ்டூடியோவில் சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

அதில் காட்சிப்படி நகராட்சித் தலைவியான "செம்மீன் ஷீலாவை, நெப்போலியனும், அவரது நண்பராக நடிக்கும்வடிவேலுவும் கடுமையாக குற்றம் சாட்டிப் பேசுவார்கள்.

அதில், வடிவேலுவுக்கு கொடுக்கப்பட்ட வசனம் இது: நீங்கள் பதவிக்கு வந்த பிறகு ஜனங்களுக்கு நிறைய பிரச்சினைகள்,மின்சாரம் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை, ரேஷனில் அரிசி இல்லை. இந்த வசனத்தை இயக்குனர் கூறி முடித்ததும்,அதிர்ச்சி அடைந்தார் வடிவேலு.

முதல்வர் ஜெயலலிதாவை குறி வைத்து இந்த வசனத்தை எழுதியிருப்பதாக நினைத்த அவர், இது சாதாரண வசனம் போலஇல்லை, அரசியல் தெரிகிறது. எனவே இந்த வசனத்தை நான் பேச மாட்டேன் என்று கூறி விட்டார்.


இதையடுத்து இயக்குனர் கலாநிதி, வடிவேலுவை சமாதானப்படுத்தி, இல்லை, இதில் அரசியல் ஏதும் இல்லை. யாரையும்குறிப்பிட்டு இந்த வசனம் எழுதப்படவில்லை என்றார். ஆனால் அதை ஏற்க வடிவேலு மறுத்தார்.

நீங்கள் சொல்வது உங்களுக்கு சரியாக இருக்கலாம். இந்தக் காட்சியில் நான் நடித்தால் எனக்கு என்ன சாயம் பூசப்படும் எனஎனக்குத் தான் தெரியும் என்று கூறியபடி மேக்கப் அறைக்குச் சென்று மேக்கப்பைக் கலைத்து விட்டார்.

அவர் பின்னாலேயே வசனகர்த்தா கலைமணியும், இயக்குனர் கலாநிதியும் சென்று ஷீலாவை வில்லியாக மட்டுமேகாட்டுகிறோம். அரசியல்வாதியாக காட்டவில்லை என்று கூறி சமாதானப்படுத்தினர்.

ஆனாலும் உடன்படாத வடிவேலு, நெப்போலியன் ஒரு கட்சியைச் சேர்ந்தவர். அவருடன் சேர்ந்து ஷீலாவை நான் தாக்கிப்பேசுவது போல காட்சி அமைந்தால் எனக்கு அரசியல் சாயம் பூசி விடுவார்கள். எனக்கு எல்லோரும் வேண்டும்.

எனவே வேறு மாதிரியாக காட்சியை மாற்றி வையுங்கள். தயங்காமல் நடித்துத் தருகிறேன் என்று கூறி விட்டார் வடிவேலு.இதையடுத்து அன்றைக்கு வேறு காட்சியை படமாக்கி விட்டு, அடுத்த நாள் வடிவேலு தொடர்பான காட்சிகளைபடமாக்கினார்களாம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil