Just In
- 1 hr ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 1 hr ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 1 hr ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 2 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Automobiles
2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்
- News
சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் -விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வலிமை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் லீக்.. வைரலாகும் அஜித் வீடியோ.. ஷூட்டிங் எங்கே தெரியுமா?
சென்னை: வலிமை படத்தின் அப்டேட் வரவில்லை என சில நாட்களாக வெறி பிடித்த மன நிலையில், திரிந்த அஜித் ரசிகர்களுக்கு, தற்போது செம ட்ரீட் கிடைத்துள்ளது.
வலிமை படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருவதாகவும், அதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தல ரசிகர்கள் மொபைல் மூலம் எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.
மேலும், தல அஜித், சென்னையில் உள்ள மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இல்லத்திற்கு சென்ற வீடியோவும் வைரலாகி வருகிறது.
|
மறைமுக அப்டேட்
வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு, நொந்து போன தல ரசிகர்களை குஷிபடுத்தும் விதத்தில் #HVinoth என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இயக்குநர் எச். வினோத் ஷூட்டிங் ஸ்பாட்டில் பயங்கர பிஸியாக வேலை பார்த்து வரும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்களும், அஜித் ஓட்டும் பைக்கின் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
|
பைக் ரேஸ்
சென்னையில் உள்ள மீஞ்சூர் அவுட்டர் ரிங் ரோடில், வலிமை படத்தின் அட்டகாசமான பைக் ரேஸ் காட்சி படமாக்கப் பட்டு வருகின்றன. தல அஜித் ஓட்டும் பைக் இதுதான் என ரசிகர்கள், எடுத்துள்ள ரேஸ் பைக் வீடியோவும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
|
அஜித் வீடியோ
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வீட்டுக்கு, நடிகர் அஜித் வலிமை பட லுக்கில் செம ஸ்மார்ட்டாக காரில் இருந்து இறங்கி செல்லும் வீடியோவையும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து பேசவே நடிகர் அஜித் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
|
ஷேர் பண்ணாதீங்க
சென்னைக்கு அருகே அஜித்தின் வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருவதால், சமூக வலைதளங்களில் ஷூட்டிங் வீடியோக்கள், பைக் ரேஸ் காட்சிகள் என பலவற்றையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வீடியோக்களை யாரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய வேண்டாம் என அஜித் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிகில் ஷூட்டிங்
இதே மீஞ்சூர் அவுட்டர் ரிங் ரோட்டில் தான் தளபதி விஜய்யின் பிகில் பட ஷூட்டிங்கும் நடைபெற்றது. ஃபாரின் பைக்கில், நடிகர் விஜய் வேகமாக செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்ட அதே இடத்தில் தற்போது, அஜித்தின் வலிமை பட பைக் ரேஸ் ஷூட்டிங்கும் நடக்கிறது. இதனால், ரசிகர்கள் கூட்டம் அந்த இடத்தை நோக்கி படையெடுத்து வருகிறது.