தமன்னா ஹீரோயின்.. கீர்த்தி சுரேஷ் தங்கச்சி.. பூஜையுடன் ஆரம்பமானது வேதாளம் தெலுங்கு ரீமேக்!

ஹைதராபாத்: சென்னை மழை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்க ஹைதராபாத்தில் செம கோலாகலமாக வேதாளம் தெலுங்கு ரீமேக் படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாக உள்ள வேதாளம் தெலுங்கு ரீமேக் திரைப்படத்திற்கு போலா சங்கர் என டைட்டில் வைத்துள்ளனர்.

அந்த படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

ரீமேக்காகும் தல படம்

ரீமேக்காகும் தல படம்

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த வேதாளம் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் போலா சங்கர். சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்து முடித்த அஜித் அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் அவருடன் இணைந்து நடித்த படம் தான் வேதாளம். அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்திருந்தார். தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

போலா சங்கர் பட பூஜை

போலா சங்கர் பட பூஜை

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாக உள்ள அந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. மகன் ராம் சரண் உடன் ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்த சிரஞ்சீவி அடுத்ததாக போலா சங்கர் படத்தை தொடங்கி உள்ளார். ஹைதராபாத்தில் அந்த படத்தின் பிரம்மாண்ட பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.

தங்கச்சி கீர்த்தி சுரேஷ்

தங்கச்சி கீர்த்தி சுரேஷ்

அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கச்சியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க உள்ளார். என்ன ஆச்சு கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ந்து தங்கை கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறாரே? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஹீரோயின் தமன்னா

ஹீரோயின் தமன்னா

சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்த நடிகை தமன்னா இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இன்று நடைபெற்ற பட பூஜையில் தக தகன்னு தங்கம் போல ஜொலித்தார் நடிகை தமன்னா.

பில்லா இயக்குநர்

பில்லா இயக்குநர்

2002ம் ஆண்டு வெளியான பாபி படத்தில் நடிகராக அறிமுகமான மெஹர் ரமேஷ் 2004ல் வெளியான வீர கன்னடிகா படத்தை இயக்கி கன்னட இயக்குநராக அறிமுகமானார். பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான பில்லா ரீமேக் படத்தை இயக்கியதும் இவர்தான். 2013ம் ஆண்டு வெங்கடேஷ் நடிப்பில் வெளியான ஷாடோ திரைப்படத்திற்கு பிறகு எந்தவொரு படத்தையும் இயக்காமல் இருந்து வந்த மெஹர் ரமேஷ் நீண்ட ஆண்டுகள் கழித்து இயக்குநர் சிவா இயக்கிய வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து இயக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X