»   »  சிக்னலில் ஆட்டம் போட்ட வேதிகா

சிக்னலில் ஆட்டம் போட்ட வேதிகா

Subscribe to Oneindia Tamil

சிம்பு நடிக்கும் காளை படத்திற்காக வேதிகா திடீரென நடுரோட்டில் டான்ஸ் ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Click here for more images

சிம்பு என்றாலே சிக்கல் என்றுதான் அர்த்தம் போலும். அதற்கேற்றாற் போலவே தற்போது ஒரு சம்பவம் நடுரோட்டில் அரங்கேற்றமாகிவிட்டது.

சிம்பு நாயகனாகவும், வேதிகா நாயகியாகவும் நடிக்கும் காளை படத்தை திமிரு படத்தை இயக்கிய தருண்கோபி டைரக்ட் செய்து வருகிறார். இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியை வித்தியாசமான சூழலில் படமாக்க விரும்பிய தருண்கோபி, வேதிகாவை நடுரோட்டில் ஆட வைக்க முடிவு செய்தார்.

நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் ஒன்றான போரூர் சிக்னலில் நடுரோட்டில் நடிகை வேதிகாவை இறக்கி விட்டசு படக் குழு.

நாலாப்புறமும் வாகனங்கள் போவதைப் பற்றி கவலைப்படாமல் வேதிகா ஆட, அதை வேனில் இருந்தபடியே படம் பிடித்தனர்.

அழகான பெண் நடு ரோட்டில் ஆடுவதைப் பார்த்து அதிர்ந்த மக்கள், சூட்டிங் என்று தெரியாமல் குழம்பியிருக்கின்றனர்.

சிலர் ஏய் பைத்தியம்...போ அந்தப்பக்கம், வண்டியில் அடிபட்டு சாகப்போற என்று திட்டவும் செய்துள்ளனர். ஆனால் வேதிகா இதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ச்சியாக ஆட்டத்தை போட்டுள்ளார். (திட்டுவது புரிந்தால் தானே.. வேதிகாவுக்குத்தான் தமிழ் தெரியாதே)

வேதிகாவின் ஆட்டத்தை கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர் கச்சிதமாக வேனில் அமர்ந்தபடி ஒளிப்பதிவு செய்தார். லைட்களோ, எபக்ட்களோ, சவுண்ட் பாக்சோ இல்லாமல் மக்கள் நடமாடும் இடத்தில் எடுக்கப்பட்டுள்ளது இந்தக் காட்சி.

சுமார் 10 நிமிடங்கள் ஆட்டம் போட்டுவிட்டு காரில் வந்து ஏறினாராம் வேதிகா.

அதற்குள் அந்தப் அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவிட போக்குவரத்து போலீசார் அங்கு வந்துவிட்டனர்.

அனுமதியில்லாமல் நடுரோட்டில் சூட்டிங்கா, முதல்ல கிளம்புங்க என்று விரட்டாத குறையாக சூட்டிங் குழுவினரை பேக் செய்து அனுப்பினராம்.

Read more about: vedhika

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil