»   »  1000 முனிகளுடன் ஒரு ஷூட்டிங்

1000 முனிகளுடன் ஒரு ஷூட்டிங்

Subscribe to Oneindia Tamil

முனி படத்தின் படப்பிடிப்பை படு வித்தியாசமாக நடத்தியுள்ளார், டான்ஸ் மாஸ்டரும், இயக்குனருமான லாரன்ஸ் ராகவேந்திரா.

டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக மாறி, தெலுங்குக்குப் போய்இயக்குநர் அவதாரம் எடுத்து அசத்தி வரும் லாரன்ஸ் இப்போது தமிழிலும்இயக்குநராக தலை காட்டுகிறார் முனி மூலம்.

சரண் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில்அசத்துகிறார். இதில் ரெளடி-கம்-டான்ஸர் வேடமாம் ராஜ்கிரணுக்கு. சும்மா போட்டுத்தாக்கியிருக்கிறாராம்.

லாரன்ஸ்தான் ஹீரோ. அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் வேதிகா. ஜில்லென்றுஇருக்கும் வேதிகா, கவர்ச்சியில் வியர்க்க வைக்கிறார். அவருக்காக கிளாமர்காட்சிகளில் ஸ்பெஷல் கவனம் செலுத்தி சிலாகிக்க வைத்துள்ளார் லாரன்ஸ்.

சமீபத்தில் படத்தின் ஒரு பாடல் காட்சியை வித்தியாசமாக படமாக்க முடிவு செய்தார்லாரன்ஸ். ஏதாவது ஒரு முனியசாமி கோவிலில் நடத்தலாம் என தேடிப் பார்த்தனர்.எங்கும் கோவில் கிடைக்கவில்லை.

கடைசியில் சென்னை நந்தம்பாக்கம் அருகே ஒரு முனியசாமி கோவில் இருப்பதுதெரிய வந்தது. உடனே சட்டுப்புட்டென்று ஷூட்டிங்குக்கு ஏற்பாடு செய்தனர்.

இப்பாடல் காட்சியில் லாரன்ஸ், ராஜ்கிரண், ரமேஷ்கண்ணா உள்ளிட்டோர்பங்கேற்றனர். இதில் விசேஷம் என்னவென்றால், முனியசாமி, முனுசாமி,முனியாண்டி என்ற பெயர்களைக் கொண்ட 1000 பேரும் கூட சேர்ந்து ஆடியதுதான்.

இதற்காக இப்பெயர்களைக் கொண்டவர்களை பத்திரிகைகளில் விளம்பரம் செய்துவரவழைத்துள்ளனர். அனைவரையும் நேற்று சென்னைக்கு வரவழைத்து ஷூட்டிங்ஸ்பாட்டுக்குக் கூட்டிச் சென்றனர்.

முனியசாமி கோவிலில் நடந்த பாடல் காட்சியில் அத்தனை பேரும் இணைந்துஅமர்க்களமான ஆட்டம் போட்டு நடித்தனர். அதன் பின்னர் அனைவருக்கும்பிரியாணி விருந்து (முனியாண்டி விலாஸ் பிரியாணியான்னு தெரியலை!)கொடுக்கப்பட்டது.

பின்னர் முனியசாமி கோவில் பிரசாதத்தையும் அத்தனை பேருக்கும் கோவில்பூசாரிகள் கொடுத்தனர். பிறகு முனி படத்தின் கேசட் வெளியீட்டு விழாவையும்ஆயிரம் முனிகளுக்கு மத்தியிலேயே வித்தியாசமாக கொண்டாடினர்.

படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் சரண் பாடல் கேசட்டுகளை எடுத்துசிவகாசியைச் சேர்ந்த முனுசாமி என்ற பெயருடைய இருவரிடம் கொடுக்க அதைராஜபாளையத்தைச் சேர்ந்த இரண்டு முனியாண்டிகளிடம் அந்த முனுசாமிகள்கொடுத்தனர். திரண்டிருந்த மற்ற முனீஸ்கள் கரகோஷம் செய்து, சீட்டி அடித்துமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

படத்தோட பாடல்கள் படு அட்டகாசமாக வந்திருக்கிறதாம். படமும் கலக்கும் பாருங்கஎன்று ஸ்டைலாக கண்ணடித்து சிரிக்கிறார் லாரன்ஸ்.

Read more about: 000 muniyandis, dance with 1

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil