ஏவிஎம் படப்பிடிப்பில் நடிகர் விதார்த் கால் எலும்பு முறிந்தது

By Shankar

Muthal Idam Movie
ஏவிஎம் தயாரிக்கும் 'முதல் இடம்' படப்பிடிப்பில் ஹீரோ விதார்த் மற்றும் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'யோகி' தேவராஜ் ஆகியோருக்கு விபத்து ஏற்பட்டது. இதில் விதார்த்துக்கு வலது கால் எலும்பு முறிந்தது. தேவராஜுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது.

அயன் படத்துக்குப் பிறகு ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் படம் 'முதல் இடம்'. ஆர் குமரன் இயக்கும் இந்தப் படத்தில் விதார்த் நாயகனாகவும், கவிதா நாயர் நாயகியாகவும் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு செல்லத்துரை ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மன்னார்குடி மற்றும் தஞ்சையில் கடந்த ஒருமாதமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் மன்னார்குடியில் கோயில் திருவிழாவில் விதார்த் நடித்த ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் விதார்த் எகிறி குதிப்பது போல ஒரு காட்சியை எடுத்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது கால் எலும்பு முறிந்தது. வலியில் துடித்த விதார்த்துக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அடுத்த இரு தினங்களில், இதே படத்தின் படப்பிடிப்பு தஞ்சையில் நடந்தது. இந்தக் காட்சியில் 'களவாணி' திருமுருகனும், 'யோகி' தேவராஜும் நடித்தனர். புல்லட்டில் இருவரும் செல்வது போன்ற காட்சி படமானபோது, ஒரு பாலத்தருகே மோட்டார் சைக்கிள் பாலன்ஸ் தவறி விழுந்தது. இதில் திருமுருகன் தப்பிவிட, தேவராஜுக்கு காலில் அடிபட்டது. ஆனாலும் அன்றைய காட்சிகள் முடியும் வரை நடித்துக் கொடுத்தார் தேவராஜ். படப்பிடிப்பு முடிந்ததும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X