»   »  இலி, நயன், திரியை வென்ற வித்யா!

இலி, நயன், திரியை வென்ற வித்யா!

Subscribe to Oneindia Tamil

லகே ரகோ முன்னாபாய் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்க நடந்த கடும் போட்டியில் வித்யாபாலன் சப்ஜாடாக வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாபாய் எம்.பி.பி.எஸ். இந்தியில் பெரும் வெற்றியைப் பெற்ற படம். இதையடுத்து தமிழ், தெலுங்கு,கன்னடத்தில் இந்தப் படத்தை ரீமேக் செய்து வசூலைப் பார்த்து விட்டார்கள். விசேஷம் என்னவென்றால் மூன்றுதென்னிந்திய மொழிகளிலும் இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

தமிழ் ரீமேக் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் கமலின் கலக்கலான நடிப்பில் வெளியானது. தெலுங்கில்சிரஞ்சீவியும், கன்னடத்தில் உபேந்திராவும் நடித்தனர்.

இப்போது முன்னாபாயின் 2ம் பாகமான லகே ரகோ முன்னாபாய் படமும் இந்தியில் பெரும் வெற்றிபெற்றுள்ளது. தாதா முன்னாபாய், காந்தீயக் கொள்கைளால் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளைபிரச்சாரம் செய்ய ஆரம்பிக்கிறார்.

இந்தப் படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து இதையும் ரீமேக் செய்ய தமிழ், தெலுங்கு, கன்னடத்தில்நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.

தெலுங்கில் மறுபடியும் சிரஞ்சீவியை வைத்து இப்படத்தை ரீமேக் செய்யவுள்ளனர். இன்னொரு முக்கியகேரக்டரில் நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பெரும் கூட்டம் அலை மோதியது. திரிஷா, இலியானா, நயனதாரா ஆகியோர்கடுமையாக முயற்சித்தினர். ஸ்டாலின் படத்தில் சிரஞ்சீவியுடன் ஜோடி போட்ட அனுபவத்தை வைத்து திரிஷாதனிப்பட்ட முறையில் நேரடியாக சிரஞ்சீவியையே அணுகி வாய்ப்பு கேட்டார்.

இலியானாவும் தன் சத்துக்கு முயற்சித்துப் பார்த்தார். நயனதாராவும் மறுபக்கம் முண்டியடித்துப் பார்த்தார்.ஆனால் இவர்கள் யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக, லகே ரகோ முன்னாபாய் படத்தில் நடித்தவித்யா பாலனையே ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்து அவரிடமும் பேசி முடித்து விட்டார்களாம்.

இதனால் இலியானா, நயனதாரா, திரிஷா ஆகியோர் கடுப்பாகிக் கிடக்கிறார்களாம்.

தமிழிலும் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறார்கள். இம்முறை கமல் இந்த ரீமேக்கில் நடிக்க மாட்டார் எனத்தெரிகிறது. எனவே மற்றொரு பரமக்குடிகாரரான விக்ரமை வைத்து லகோ ரகோ முன்னாபாய் ரீமைக்கை தமிழில்தயாரிக்க முயற்சிகள் நடக்கிறதாம்.

தெலுங்கில் விட்டதை தமிழிலாவது பிடிப்பார்களா திரிஷா, நயனதாரா வகையறாக்கள்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil